
நறுந்தொகை

அதிவீரராம பாண்டியர்அருளிச் செய்த நறுந்தொகை ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந்தவரென்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் ‘கொற்கையாளி’ என வருதலால் அறியப்படு கின்றது. கொற்கை, பாண்டி மன்னர்கள் இருந்து அரசு புரியும் பதிகளிலொன்றாயிருந்ததென்பதைச்…
