ஆண்டியின் புதையல்
கா. அப்பாத்துரை

அறிவுசான்ற கதைகள் வாயிலாக இளமாணவர்களின் அறிவாற்றலை வளப்படுத்துவதுடன், அவர் கட்குக் கல்வியில் ஆழ்ந்த பற்றும் உண்டாகச் செய்யலாம் என்பது அறிஞர் கண்ட முடிபு.

மேலைநாட்டு மொழிகளில் சிறப்பாக ஆங்கில மொழியில் மாணவர்க்கேற்ற கதை நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றைத் தழுவி எழுதப்படும் நூல்களில் முதல் நூலே இவ் ஆண்டியின் புதையல் என்னும் விழுமிய கதை நூல். இக் கதைகள் மாணவர்க்குக் கல்வி கற்பதில் பெருவிருப்பை உண்டாக்க வல்லனவாகும்.

இதன்கண் ஆண்டியின் புதையல், நெய்தலங் கானல், நாரை அரசு எனும் மூன்று கதைகள் உள்ளன. தமிழ்நாட்டுப் பண்புக்கேற்ப இக்கதைகளை எளிய இனிய நடையில் பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை எம்.ஏ.,எல்.டி. அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். தமிழகம் இந்நூலை ஏற்றுப் பயனெய்து மென நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *