தமிழின் வெற்றி 
கி. வா. ஜகந்நாதன்

தமிழின் வெற்றி
கி. வா. ஜகந்நாதன்

இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப் பாராட்டுக் கூறச் செய்வதும் ஆகிய செயல்களை நிறைவேற்றுகிறார்கள்; சோதனைகளில் வெற்றி பெறுகிறார்கள்.

தமிழ் வேறு, தமிழ் புலவர்கள் வேறு அல்ல; ஆகையால் புலவர்களின் செந்தமிழ்ப் புலமை பல நிலைகளிலும் காரியத்தைச் சாதித்துத் தரும் வரலாறுகள் அடங்கிய இதற்கு, “தமிழின் வெற்றி” என்ற பெயரை வைத்தேன்.

இந்தப் புத்தகத்தில் புறநானூற்றுப் பாடல்களை ஒட்டிய வரலாறுகள் மூன்றும், தனிப் பாடல்களை ஒட்டியவை ஐந்தும், நூல்கள் எழுந்த வரலாறுகள் இரண்டும் உள்ளன. பாடல்களில் அமைந்த பொருளையும், அவற்றோடு உள்ள குறிப்புகளையும் கொண்டு நிகழ்ச்சிகளைக் கற்பனையினால் விரித்து அமைத்து எழுதியவை இவை.

இந்த முறையில் ‘புது மெருகு’, ‘எல்லாம் தமிழ்’ என்ற பெயருடன் இரண்டு புத்தகங்கள் முன்பு எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ள வரலாறுகளால் புலவர்களின் பெருமிதமும், ஆற்றலும், தமிழின் ஏற்றமும் வெளியாகும். வரலாற்றினிடையே வரும் தமிழ்ப் பாடல்களின் பொருளும் தெளிவாக விளங்கும்.

கி.வா.ஜகந்நாதன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *