Tag திரு. வி. கலியாணசுந்தரனார்

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! – திரு. வி. கலியாணசுந்தரனார்

என் கடன் பணிசெய்துகிடப்பதே ! திரு. வி. கலியாணசுந்தரனார் அறிவு விளக்கமும் அன்பு நிகழ்ச்சியும் மக்கள் வாழ்விற்கு இன்றியமையாதன. வினை இல்வழி அறிவும் விளக்கமுறாது; அன்பும் நிகழாது. அறிவு விளக்கத்துக்கும் அன்பு நிகழ்சசிக் கும் ஊற்றாயிருப்பது வினை. வினை, அறிவுக்கும் அன்புக்குங் கொழுகொம்பு போன்றது. ஆதலால், மக்கள் வினைவழி அறிவு பண்பட்டு அன்பு நிகழும். அறிவு…

சன்மார்க்க போதமும் திறவும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சன்மார்க்க போதமும் திறவும் திரு. வி. கலியாணசுந்தரனார் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம். பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை.…

சமரச சன்மார்க்கத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சமரச சன்மார்க்கத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் முன்னுரை ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ ‘சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை.…

சைவத்தின் சமரசம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத்தின் சமரசம் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே – அப்பர் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வோருலகுண்டு. எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின்…

முருகன் அல்லது அழகு – திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அல்லது அழகு திரு. வி. கலியாணசுந்தரனார் குமரகுருபரர் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே                உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமேகலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே                கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியேஅலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே               …

தமிழ்நாட்டுச் செல்வம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாட்டுச் செல்வம் திரு. வி. கலியாணசுந்தரனார் தோற்றுவாய் உங்கள் சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசிய போது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன்.…

நாயன்மார் திறம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நாயன்மார் திறம் திரு. வி. கலியாணசுந்தரனார் “நாயன்மார்” என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட “சுதேசமித்திரன்” அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன; நூலுக்கு “நாயன்மார்…

நினைப்பவர்‌ மனம்‌ – திரு. வி. கலியாணசுந்தரனார்

நினைப்பவர்‌ மனம்‌திரு. வி. கலியாணசுந்தரனார் “குறியே போற்றி குணமே போற்றிநெறியே போற்றி நினைவே போற்றி” – மாணிக்கவாசகர் சகோதரிகளே! சகோதரர்களே! நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப்பெறுத் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தேகொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார்,அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப்போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின்ஒரு…

ஆலமும் அமுதமும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

ஆலமும் அமுதமும் திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒருவன் “உலக வாழ்க்கையே வேண்டாம்” என்று கடவுள்திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன்கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்? சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள்இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று,விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல்…

இன்பவாழ்வு – திரு. வி. கலியாணசுந்தரனார்

இன்பவாழ்வு திரு. வி. கலியாணசுந்தரனார் ‘இயற்கை வாழ்வே இன்ப வாழ்வு’ என்பது பழந் தமிழர் கொள்கை. அன்னார் இயற்கையோடு கலந்த இன்ப வாழ்வை நடத்தினவர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களில் இன்னுங் காணலாம். இடைக்காலத்தில் பழந்தமிழர் கொள்கை வீழ்த்தப்பட்டது. அன்று தொட்டு நாடு உரிமையுணர்விழந்து வறுமைக்கும் பிணிக்கும் இரையாகி நரகத்துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மீண்டுந் தமிழ்நாடு…