Tag கா. ந. அண்ணாதுரை

தஞ்சை வீழ்ச்சி – கா. ந. அண்ணாதுரை

தஞ்சை வீழ்ச்சி கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும், சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து, தாழ்வு தீண்டிடும் வேதனை நிலை பெறுவதுண்டு – வஞ்சகர்களோ எப்படியோ, எதைச் செய்தோ, வாழ வழி அமைத்துக் கொள்வர். இந்தச் சோகச் சுமையை, தமிழக வரலாற்றுச்…

மக்கள் தீர்ப்பு – கா. ந. அண்ணாதுரை

மக்கள் தீர்ப்பு கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “பொது ஜனம்! மக்களின் தீர்ப்பு! – அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின் மனம், ஒரு காலிப்பாண்டம்! யார் எதைப் போட்டாலும், ஏற்றுக் கொள்ளும்! அதிலும், உனக்கு வேடிக்கை தெரியாது – அந்தப் பாண்டமும் ஓட்டை! போட்ட பண்டம்…

பிடிசாம்பல் – கா. ந. அண்ணாதுரை

“சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்!

வர்ணாஸ்ரமம் – கா. ந. அண்ணாதுரை

வர்ணாஸ்ரமம்கா. ந. அண்ணாதுரை சர் சண்முகம் அவர்கள் இதுபோது வகித்து வரும் ‘பதவி’ யினின்றும் விலக இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அந்தச் செய்தியுடன், பலர் தமது ‘ஆசை’யையும் இணைத் துப் பார்க்கிறார்கள். அதாவது பதவியை விட்டுவிட்டு சர் சண்முகம், தமிழருக்குத் தலைமை தாங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல். அவ்வித ஆவல் கொண்டவர்களில்…

குமரிக்கோட்டம் – கா. ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம் கா. ந. அண்ணாதுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கை யிலேயே, நேரிடும் சிலபல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்து விடுகின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே காணப்படும் சீறும் தந்தை, வாதிடும் மகன், வசீகர மங்கை,…

சந்திரோதயம் – கா. ந. அண்ணாதுரை

சந்திரோதயம் கா. ந. அண்ணாதுரை அய்யாவின் புகழ்மாலை! “இதை நாம் சுமார் 10, 15 வருஷ காலமாகவே சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதையும் பார்த்து…

மே தினம் – கா. ந. அண்ணாதுரை

மே தினம் கா. ந. அண்ணாதுரை மே தினம் வைகாசியில் கருடசேர்வை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூர உற்சவம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் சனிக்கிழமை உற்சவம், ஐப்பசியில் தீபாவளி, கார்த்த்திகையில் தீபவிழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், பங்குனியில் உத்திரம், சித்திரையில் பௌர்ணமி. இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி, தலைமுறை தலைமுறையாகப்…

வண்டிக்காரன் மகன் – கா. ந. அண்ணாதுரை

வண்டிக்காரன் மகன்கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 ஆப்பக்கடை அன்னம்மாளிடம் அச்சம் கொள்ளாதவர்கள் அவலூரில் யாரும் இருக்கமுடியாது. அவ்வளவு துணிச்சல். யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத சுபாவம். அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால், ஏதோ பெரிய விபரீதம் நேரிட்டுவிட்டது என்றுதானே பொருள். விபரீதம்தான் நேரிட்டுவிட்டது. தன் மகள் காவேரியின் ஜாதகத்தைக் கேட்க அருணகிரி வருவான்…