Tag நாவல்

ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் – ஆ. கார்மேகக் கோனார்

ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் ஆ. கார்மேகக் கோனார் நூன்முகம் ஆபுத்திரன் சரித்திரம், தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலைக் காப்பியத்துள் ஆங்காங்கு இடையிடையே வரும் ஒர் கிளைக்கதை. இதனை ஒர் கோவைப்படத் தொகுத்துப் புதிய உரைநடையில் இளைஞர் கதைப்பூந்துணர் மலர் 1 ஆக வெளியிடுகின்றேன். இச்சரித்திரத்துள் காவிய ரசம் பற்றியும், வேறு நன்மை பற்றியும்…

ஆட்கொல்லி – க. நா. சுப்ரமண்யம்

ஆட்கொல்லிக. நா. சுப்ரமண்யம் ஏதோ ஒரு உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போன போது அங்கு பிள்ளை வீட்டாருடன் உற்றார் உறவினர் என்று சொல்லிக் கொண்டு அதிகம் பேர் வந்திருக்கவில்லை என்று கவனித்தேன். ஏன், என்ன என்று விசாரித்த போது ஒரு உண்மை தெளிவாயிற்று அவர்கள் பணக்காரர்கள்; பணம் சேர்க்கிற காரியத்தில் மும்முரமாக இருந்த அவர்கள் உற்றார்…

மக்கள் தீர்ப்பு – கா. ந. அண்ணாதுரை

மக்கள் தீர்ப்பு கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “பொது ஜனம்! மக்களின் தீர்ப்பு! – அர்த்தமற்ற வார்த்தைகள். உன் போன்ற ஏடு புரட்டிகளின் கற்பனைகள். ஏமாளிகளின் நம்பிக்கை! பாமரரின் மனம், ஒரு காலிப்பாண்டம்! யார் எதைப் போட்டாலும், ஏற்றுக் கொள்ளும்! அதிலும், உனக்கு வேடிக்கை தெரியாது – அந்தப் பாண்டமும் ஓட்டை! போட்ட பண்டம்…

பிடிசாம்பல் – கா. ந. அண்ணாதுரை

“சாம்பல்! சாம்பல்! சாளுக்கிய நாடு சாம்பலாயிற்று! சாளுக்கிய மன்னன் பிணமானான், களத்தில்! முடிவிலொரு பிடிசாம்பலானான்! முடிவிலொரு பிடி சாம்பல்!

சந்திரோதயம் – கா. ந. அண்ணாதுரை

சந்திரோதயம் கா. ந. அண்ணாதுரை அய்யாவின் புகழ்மாலை! “இதை நாம் சுமார் 10, 15 வருஷ காலமாகவே சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு மேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறதையும் பார்த்து…

பலிபீடம் நோக்கி – கலைஞர் மு. கருணாநிதி

பலிபீடம் நோக்கி கலைஞர் மு. கருணாநிதி புத்தகத்தைப் பற்றி ‘எரிமலை’யின் மூன்றாவது பொறியாகப் பிறக்கிறது ‘பலிபீடம் நோக்கி.’ புரட்சிகரமான சிந்தனையும் புதுமையான போக்கும் மிளிர்கின்றன இந் நூலிலே. கருத்திலும் சொல்கின்ற முறையிலும் புதுமையைக் கையாண்டிருக்கிறார் இதன் ஆசிரியர். தோழர் மு. கருணாநிதியின் பெயரை தமிழுலகம் நன்கறியும். நாடகாசிரியர். புதுயுகம் காண விரும்பும் இளைஞர். தீவிரமான கருத்துக்…

அன்னக்கிளி – வல்லிக்கண்ணன்

அன்னக்கிளிவல்லிக்கண்ணன் சில வார்த்தைகள் ‘ராஜா ராணி கதை’களுக்கு மக்களிடம் என்றுமே அதிகமான செல்வாக்கு உண்டு. குழந்தைப் பிராயத்தில் பாட்டி, தாத்தா, அம்மா, மற்றும் சுவையாகக் கதை சொல்லத் தெரிந்தவர்கள் வாய் மூலம் இத்தகைய கதைகளைக் கேட்டுக் கேட்டு உள்ளுற வளர்ந்து வருகிற ஒரு விருப்பம், பெரியவர்களான பிறகு சரித்திரக் கதைகளிடம் விசேஷமான மோகமாகப் பரிணமித்து விடுகிறது…

பாண்டியன் நெடுஞ்செழியன் – கி. வா. ஜகந்நாதன்

பாண்டியன் நெடுஞ்செழியன்கி. வா. ஜகந்நாதன் சங்க காலத்து இலக்கியங்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் பாண்டிய மன்னர்களில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இளமையிலே அரசாளப் புகுந்து பல போர்களில் வெற்றி பெற்று வண்மையிலும் திண்மையிலும் சிறந்து நின்றான். அவன் இயல்புகளைப் பத்துப் பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை என்ற இரண்டு நூல்களும் எடுத்துரைக்கின்றன. அவன் வரலாற்றோடு…

மூன்று தலைமுறை – கி.வா. ஜகந்நாதன்

மூன்று தலைமுறைகி.வா. ஜகந்நாதன் 1 “கழுதை கெட்டால் குட்டிச் சுவர்” என்ற பழமொழியை அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டது இந்தக் கழுதை. இந்தக் கழுதை கெடாத கழுதை. அது குட்டிச் சுவருக்கு அருகில்தான் நின்று கொண்டிருந்தது. வெறும் குட்டிச்சுவராக இருந்தால் அங்கே நின்றிருக்காது. சுற்றி லும் புல் தரை இருந்தது. எதிரே ஒரு சிறிய குளம். குள…