Tag நாவல்

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா உமா ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தாள். கீதா என்று அதற்குப் பெயர். கீதா மிகவும் நல்ல பூனைக்குட்டி. திருட்டுத்தனமாக அது பாலைக் குடிக்காது; எங்கேனும் நல்ல காரியமாய்ப் போகும் போது குறுக்கே போகாது; நடு இரவிலே, ‘மியாவ், மியாவ்’ என்று கத்தித் தூக்கத்தைக் கெடுக்காது. இப்படிப்பட்ட பூனைக்குட்டியின்…

குமாஸ்தாவின் பெண் – கா. ந. அண்ணாதுரை

குமாஸ்தாவின் பெண் கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “ஆமாம்! நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. குமஸ்தாவின் மகள் என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே. அந்த நாடகக் கதையில் வரும் குமஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள், தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல.…

குமாரி செல்வா – வல்லிக்கண்ணன்

குமாரி செல்வா – வல்லிக்கண்ணன் ஆசிரியர் பரமசிவம் அவர்தான் அற்புதமான காதல் கதைகள் எழுதிப் பெயர் பெற்றவர் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே! ‘வால் நட்சத்திரம்’ பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த காலம் அது. ஆசிரியரின் பாலிஸியே தனி. சுருக்கமாகச் சொன்னால், ‘அமெரிக்கத்தனம்’ தான் அவரது பண்பாடு. அடிச்சு விளாசல், அபாரமாக அளத்தல், சுத்த சுய விளம்பரம், அற்புதப் புதுமை,…

மனிதர்கள் – வல்லிக்கண்ணன்

மனிதர்கள் – வல்லிக்கண்ணன் உலகம் ஒரு பல்கலைக் கழகம். வாழ்க்கை, அனுபவங்கள் மூலம் கற்றுத்தருகிற, ஆசான். மனிதர்களே விதம் விதமான புத்தகங்கள். மனிதர்களை, அவர்களுடைய விந்தைக் குணங்களையும் விநோதமான போக்குகளையும், கண்டு ரசிப்பது இனிய விஷயமாகும். அவை கதைகள், நாவல்கள் முதலியவற்றுக்கு ஆதாரமான பொருள்களாகவும் அமைகின்றன. அப்படி வாழ்க்கையும் மனிதர்களும் என் உள்ளத்தில் ஏற்படுத்திய பதிவுகளும்,…

தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்

தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார் [கும்பகோணத்தில் கௌரவம் வாய்ந்த தனவந்தர் குடும்பத்தைச் சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் என்ற ஒருவர் இருந்தார். அவர் சிறு வயது முதல் தன் புத்தியையெல்லாம் குறும்பு செய்வதிலேயே உபயோகித்து, அதில் மிகவும் நிபுணரானார். அவர் இறந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாயிற்று. அவரது குறும்புகளை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். அவைகளுள்…

புயல் – தொ.மு.சி. ரகுநாதன்

புயல் – தொ.மு.சி. ரகுநாதன் இந்த நாவல் ஆசிரியர் ரகுநாதன் அவர்களின் கன்னி முயற்சி; முதல் நாவல். இளம் பெண் ஒருத்தியின் மென்மையான மனோ உணர்ச்சிகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்திரிக்கும் இந்த நாவல் முதன்முதலாக வெளிவந்தபோதே, தமிழுக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்து விட்டார் என்பதை உணர்த்துவதாக அது அமைந்தது. அடுத்தடுத்துப் பல பதிப்புக்களைக்…