

மாங்காய்த் தலை
ந. பிச்சமூர்த்தி
ஆசிரியர்
இவர் எழுத்துலக ஜாம்பவான்களுள் ஒருவர். வக்கீல் பட்டம் பெற்ற இவர், பல ஆண்டுகளாகவே எழுத்துப் பணியில் ஈடுபட்டுத் தொண்டு செய்துவரும் இவர், ‘பிச்சமூர்த்தி பாணி’ என்ற ஒரு தனிவகை எழுத்தையே தமக்கென்று வகுத்துக் கொண்ட பெருமை பெற்றவர். கதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள் இவை களைத் தமக்கென அமைத்துக் கொண்ட தனிப்பாணியில் எழுதிவரும் இவர், தாமாகவே வகுத்துக் கொண்ட தனிமுறை யில் கவிதை எழுதுவதிலும் வல்லவர்.
உலக நடப்பின் சிக்கல்கள், உணர்ச்சி வேகங்கள், பிரச்னைகள் இவற்றை ஊடுருவிப் பார்த்து அவற்றின் உள்பொருள் விளங்கும்படி கதை முதலியவற்றை எழுதுவதில் நல்ல ஆற்றல் பெற்றவர் இவர்.
பயன் மிக்க பணியில் தம் வாழ்க்கையைச் செலவிட்ட இவருக்கு வயபது அறுபது நிறைந்து விட்டது.
இன்றும், தம் அநுபவங்களால் மெருகேறிய கதை முதலியவற்றை இவர் எழுதிய வண்ணம் இருக்கிறார்.
தினச் செய்தித்தாள் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.



