காளி 
ந. பிச்சமூர்த்தி

காளி
ந. பிச்சமூர்த்தி

முகவுரை

இந்த நாடகத்தைப் பற்றி ஒரு வார்த்தை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முந்தி இதை எழுதினேன்; அதுவும் படிப்பதற்காக. நான் விரும்பினால் கூட அதில் மறுபடி இன்று கை வைப்பதென்பது இயலாத காரியம்.

பொழுது போக்க விரும்பும் சோம்பேறிகளுக்காகப் பொழுது போகாத சோம்பேறிகள் எழுதுவதற்குப் பெயர் இலக்கியம் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைப்பதில்லை. மனிதனை வளரச் செய்த சக்திகளில் முக்கியமானதொன்று மதம். இன்று மதத்திற்குக் கௌரவம் இல்லை. தற்கால மனிதனை உயர்த்தக் கூடிய சக்தி விஞ்ஞானம். ஆனால் அது அசுரத் தன்மை கொண்டதாய் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளின் உண்மையான வேலையை வெற்றிகரமாக இலக்கியந்தான் செய்யக் கூடும். வருங்கால இலக்கியத்தின் வழியும் இதுவே.

ந.பிச்சமூர்த்தி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !