

அமைதி
பாரதிதாசன்
பாவேந்தர் முன்னுரை
அமைதி என்னும் இச்சிறு நாடகம், நாடக உறுப்பினர் – நடிகர் எவருக்கும் பேச்சில்லாது நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. ஆதலின், இதை ஊமை நாடகம் என்றேன். நடிகர் அனைவரும் ஊமைபோல் நடித்தாலும், ஊமைகளைக் கொண்டும் இந்நாடகத்தை நடைபெறுவிக்கலாம் ஆதலினாலும் ஊமை நாடகம் என்றது பொருந்துவதாகும்.
இந்நாடகம் எம்மொழியராலும் நடத்துவிக்க முடியும். கருத்துக்களும் உலகப்பொதுவானவை!
-பாரதிதாசன்
