
அமைதி
பாரதிதாசன்
ஒன்பது
இருள்! பெருமாள் கோவில் மடப்பள்ளியின் தெருப் பக்கத்துச் சன்னல் திறக்கப்படுகிறது! உட்புறமிருந்து ஒரு பெருந் தட்டு வெளிப்புறம் நீட்டப்படுகிறது! அந்தச் சன்னலில் கருத்தின்றி ஒரு பெண் சற்று தொலைவில் மற்றொருவனின் தோளில் கை வைத்தப்படி நிற்கிறாள். மண்ணாங்கட்டி வெளிப்புறமிருந்து தட்டை வாங்கிப் போகிறான்!
பெண்ணை விட்டுக் காளை பிரிகிறான். பெண்ணாள் கண்பூத்துப் போக நெடு நேரம் சன்னலை நோக்கி நிற்கிறாள். அவள் கைகளை முறித்துக் கொண்டு செல்கிறாள்.
மண்ணாங்கட்டி, தட்டிலிருந்து பொங்கலில் வேண்டு மட்டும் அருந்துகிறான். மீந்ததை ஒருபுறம் உட்கார்ந்து தூங்கி விழும் நொண்டியின் எதிர் வைத்து நடக்கிறான். நொண்டி விழித்துப் பொங்கலை மகிழ்ந்துண்ணுகிறான்.
