

என் முன்னுரை
தமிழகத்தை – திராவிட நாட்டைத் தம் வழிப்படுத்த முதன்முதல் தமிழகத்தை அடைந்த ஆரியர் கூட்டத்தின் தலைமைப் பாதிரிதான் அகத்தியன்.
அவன் தமிழகத்தில் வந்து தமிழ்ப் புலவர்பால் தமிழைக் கற்றுக் கொண்டான். வாலை யவிழ்த்தான்.
முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனே ஒருவன் அரசனாகி யிருப்பது என்றான்.
பலவாறு அந்நாள் ஆளவந்தாரைப் பிடிக்க ஏற்றவாறு புளுகினான். அரசனின் செல்வாக்கினால் நாளடைவில், பச்சைத் தமிழர் நூற்களை ஒழித்துத் தன் நஞ்சு கலந்த காப்பித்தூளைப் பரப்பினான். அதை அரசன் அருந்த அனைவரும் அருந்தலாயினர். இதையே சுருக்கமாக அகத்தியன் விட்ட புதுக்கரடியில் சொல்லியுள்ளேன்.
– பாரதிதாசன்

