தமிழ் வளர்கிறது 
நாரா. நாச்சியப்பன்

தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்

சின்ன வயதிலேயே என்னைத் தமிழ் ஆட் கொண்டுவிட்டது. தமிழ் என்றால் என் உயிர் என்று நினைக்கும்படியான ஓர் உள்ளுணர்வை என்னிடத்தே தூண்டிவிட்டவை கவியரசர் பாரதிதாசனின் பாடல்கள் தாம். பாரதிதாசன் பாடல்களை முன்மாதிரியாக வைத்து என் பாடல்களை எழுதத் துவங்கினேன். அப்போது என் ஆசிரியராய் இருந்த பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையார் இத்துறையில் என்னை ஊக்கப்படுத்தினர். ஆசிரியர், திரு. சுப. இராமநாதன் அவர்களும் என் தமிழார்வத்தை வளரச் செய்தார். தமிழ் உல கில் என்னைப் பெரும் புகழ் பெறச் செய்தவர் ‘பொன்னி’ ஆசிரியர், திரு முருகு. சுப்பிர மணியன் ஆவார்.

இவர்களெல்லாம் என் கவிதைகளை வளர்க்கவும் பரப்பவும் துணை செய்தார்கள். ஆனல், அரசாங்கமோ பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதி வெளியிட்ட இன்பத் திராவிடம் என்ற இனிய தமிழ்க் கவிதை நூலைத் தடை செய்துவிட்டது.

இருந்தாலும் என் தமிழ்ப் பற்று முற்றுப் பெற்றுவிடவில்லை. ‘தமிழ் வளர்கிறது !’ என்ற நூலே இப்போது தமிழ் மக்களுக்குக் காணிக்கையாக்கி யிருக்கிறேன்.

கற்றுத் தமிழுணர்ச்சி பெற்று நல்ல தமிழை வளர்க்கவும், நலிவு வராமல் காக்கவும் உறுதி யேற்க வேண்டியது தமிழர் கடன்.

உங்கள்
நாரா நாச்சியப்பன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *