சிலப்பதிகாரமும் தமிழரும் 
ம. பொ. சிவஞானம்

சிலப்பதிகாரமும் தமிழரும்
ம. பொ. சிவஞானம்

தூங்கிக் கிடந்த தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பியவர், தலைவர் ம. பொ. சிவஞானம். ஒவ்வொரு தமிழ் மகனும் என்னுடைய வீட்டிற்கு நான் அதிகாரி என்று எண்ணும்படி செய்தவரும் அவரே. தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் பேசும் திறமையுள்ள சிலரில் முதல் வரிசையில் இருப்பவர் திரு. ம.பொ.சி. ஆனால் சிலருக்குப் பேசத் தெரியும், எழுதும் சக்தி இருக்காது. இலக்கியம், அரசியல் இரண்டு துறையிலும் பேசும் வன்மையும் எழுதும் திறமையும் படைத்தவர் திரு. ம.பொ.சி.

அன்னாரின் எழுத்தோவியங்களை தமிழ் மக்களுக்கு அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக் கிறது. முதல் முதலாக ‘சிலப்பதிகாரமும் தமிழரும்’ என்னும் இச்சிறு நூல் வெளிவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இலக்கிய உலகில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய பல நூல்கள் வெளிவரப்போகிறது. திரு.ம.பொ.சி யின் நூல்களுக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு தரும்படி கேட்பது சொந்த வீட்டில் விருந்துண்ண அழைப்பது போலாகும்.

தமிழகத்தில் தனியரசு காணப் போர்முரசு கொட்டும் தமிழ்ப்பெரியார் திரு. ம.பொ.சி.யின் இலக்கியங்களை வெளியிடும் பாக்கியத்தை எங்கள் பதிப்பகத்துக்கு அளித்த அன்னாருக்கு எங்கள் வணக்கத்துடன் கூடிய நன் றி உரியதாகும்.

கதம்பம் வெளியீடு

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *