
சிலப்பதிகாரமும் தமிழரும்
ம. பொ. சிவஞானம்
இளங்கோ இயற்றிய தேசீயக் கீதம்
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடை (போன்றிவ் வங்கண் உலகளித்த லான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்
மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற் கவனளிபோல்
மேல்னின்று தான்சுரத்த லான்
பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்!
வீங்குநீர் வேலி உலகிற் கவன் குலத்தோ
டோங்கிப் பரந்தொழுக லான்.
ஆங்கு,
பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய வென்ப தல்லதை,
ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்,
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே;



