
தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்
மறைமலையடிகளை மறந்திடாதே!
இனித்திருக்கும் செந்தமிழில் வடமொ ழிக்கேன்
இடங்கொடுத்துத்:தமிழ்ச்சுவையைக்:கெடுக்க வேண்டும்
தனித்திருக்கும் வன்மையுள்ள தமிழி னோடு
தகுதியிலாப் பிறமொழிச்சொல் கலக்க வேண்டாம்
எனத்திருவாய் மலர்ந்தவர்யார் ? இசைத்த வண்ணம்
இலக்கியங்கள் தூய்தமிழில் ஆக்கி வைத்து
தனித்தமிழின் கலங்காத்தார் மறைம லையார்
தமிழ்மகனே அவர்பெருமை மறந்தி டாதே!
பலமொழியும் கற்றறிந்தார்; தமிழிற் சேர்ந்த
பண்பாட்டை யுணர்ந்திட்டார்; இனிமை கண்டார்:
உலகமொழி அனைத்தும்வந் தெதிர்கின் றாலும்
ஒருதமிழ்ச்சொற் கீடாகா தென்ற றிந்தார்;
விலகுகவே விலகுகவே என்று கூறி
வேற்றுமொழிச் சொல்களைந்து தமிழில் நூற்கள்
பலதந்து தமிழ்காத்தார் மறைம லையார்
பழந்தமிழா அவர்கினேவை மறந்தி டாதே !
“சந்தேகம்’ தமிழில்லை, ஐய” முண்டோ ?
“சந்தோஷம்” தமிழில்லை, “மகிழ்ச்சி” கண்டீர்
குந்துமொரு வண்டியைப்போய் ‘சைக்கிள்” என்பீர்
குறையுண்டோ மிதிவண்டி” என்னும் சொல்லில்:
“எந்திரத்’தை ‘விசைப்பொறி”தான் என்று சொன்னல்
இளக்கமில்லை பெருமையென எடுத்துக் காட்டிச்
செந்தமிழைத் தூய்தாக்கி ‘யூரீ”யை நீக்கித்
“திருத் “தந்தார் மறைலையார் மறந்தி டாதே!
தமிழ்காக்கத் தனித்தமிழின் பெருமை காக்கத்
தமிழ்நாட்டார் தம்மதிப்புக் காக்க வென்றே
இமைதுடிக்க மறந்தாலும் நினைவு மாறா
திருந்துபல செயல்செய்தார் மறைம லையார்
நமைமறவா திருந்தார்க்கு வாழ்வு நாளில்
நன்றிசெய்ய மறந்துவிட்டோம்; இறந்த
பின்னும் அமையுமொரு செயல்செய்யா திருந்து விட்டால்
அழகல்ல தமிழ்மகனே மறந்தி டாதே !



