தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்


புதிய தமிழ் நாடு

தமிழ் நாட்டில் இந்நாளில் தலைவி ரித்துத்
தகிகிணத்தோம் போட்டாடும் பஞ்ச மெல்லாம்
குமுறுகின்ற ஏழைமக்கள் உள்ளங் தன்னில்
குதிகொள்ளும் சிந்தனையைத் தூண்டி விட்டே
எமையிந்த நிலைக்குவரச் செய்த தற்கே
எதுமூலம் எனவறியத் துடித்த போது
தமிழ்நாட்டைக் கெடுத்ததெலாம் வேற்று மையாம்
தடையென்று தெரிந்ததை யொழிக்கச் சேர் வோம் !

மனிதரெனப் பிறந்துவிட்டோம் சண்டை யிட்டு
மாய்வதிலே பொருளில்லை இந்நாள் மட்டும்
அனைவருக்கும் பொதுவான உலகில் நீவிர் – ஆட்சிசெய
அடிமையென நாங்கள் வாழ்ந்தோம். தினந்தினமும்
உண்டுறங்கிக் கொழுத்த நீவிர் திடீரென்று
பொதுவுடைமை கூறக் கேட்டால் மனங்கலங்கல்
இயற்கையதை மாற்று தற்கும் மருந்துண்டு
பகுத்தறிவென் றென்று கண்டிர் !

பகுத்தறிவில் சற்ருழ்ந்து பார்ப்பி ராயின்
பாரினிலே மனிதரிலே வேற்று மைகள்
வகுத்ததெலாம் சோம்பேறி யாக வாழ்ந்து
வந்தகொடும் பாதகரே யென்று காண்பீர் !
மிகுத்தநலம் ஒருவர்உற நாட்கள் தோறும்
மேனியெலாம் கருமையுற வேர்வை ரத்தம்
உகுத்திடுக ஒருவரென்று மன்றில் சட்டம்
உண்டாக்கி வைத்தபெரும் சண்டா ளர்யார்?

வண்ணனின் சேயையொரு வண்ணு னென்று
வகுத்துவிட்ட மடையர்களைப் பெரியா ரென்றே
அண்ணுந்து பார்க்கின்ற அறிவற் ருேரே யான்
சொல்லும் சொற்கேளிர்! ஏழை நெஞ்சம்
புண்ணுக நடைமுறையில் தாழ்வு செய்து
பொறுமைக்கோர் எல்லையினைக் காணச் செய்தீர்!
எண்ணுமல் இருந்துவிட்டீர் பொறுமைக் கெல்லை
என்றாலே புரட்சிப்போர்த் துவக்க மென்றே !

தொழிற்பெயரைச் சாதியென்று வகுத்த பின்னர்
தோன்றியவள் வறுமையெனும் ஆட்டக் காரி.
எழிற்பிறவி மானிடமென் றறிஞர் சொல்வார்
யாமுமந்தப் பிறவிதனை யடைந்தும் வாடி நிழல்காண
வகையிைன்றி நிற்க நேர்ந்தால் நெஞ்சந்தான் கொதியாதோ?
இந்த காட்டில் அழுதொருவன் இருக்கும்வரை
விடுத லேயை அடைந்துவிட்டோம் என்பதெல்லாம்
வெறும் கூப் பாடே!

ஏழ்மையெனும் நீரருந்தி உழைத்து ழைத்தே
இன்பமெனும் நற்குளத்தில் நீர ருந்த
வாழ்வினிலே இயலாமல் வாட்ட முற்று
வாழுகின்ற பெரும்பகுதி கண்டும், செல்வர்
ஆளுகின்ற மனப்போக்கும், உழைப்ப தின்றி
அளவிடுவோம் போகமெனும் நிலையும் கண்டால்
கூழுமின்றி வாழுகின்ற மக்கள் உள்ளங்
கொதியாம லிருப்பாரோ சிந்திப் பீரே !

வீரமுள்ள இளைஞர்களே இங்கு வாரீர் !
விடுதலைக்கு வழிவகுப்போம் தமிழ ரெல்லாம்
வீரரென வாழ்ந்தநாள் பொதுமைக் கொள்கை
விளங்கியதென் றிலக்கியத்தில் சான்று கண்டோம்,
ஆரமுது தினம்படைத்தே யுண்ண வேண்டின்
அனைவருக்கும் பொதுவிந்த உலக மென்ற
நேரியதோர் கொள்கையினைத் தமிழர் நாட்டில்
நிலைக்கவைத்தால் யாவருக்கும் விடுத லைதான்!

பொதுமையெனில் பசுவருகில் புலிகள் வந்து
பொதுக்குளத்தில் நீரருந்தல் என்று சில்லோர்
மதியின்றிப் புகல்கின் றார் தமிழர் நாட்டில்
மாடென்றும் புலியென்றும் பேத மில்லை.
புதிதாகும் தமிழகத்தில் உள்ளோர்க் கெல்லாம்
பொதுவாகத் தமிழரென்று பெயரே யன்றி
நிதிபடைத்தார் இவரிவரே வறிய ரென்னும்
நிலைபோகும் வளமாகும் தமிழர் நாடே!

வாடியொரு மகனழவும் மற்றேர் செல்வன்
வயிறடைத்து மகிழ்வதுவும் தமிழர் நாட்டில்
ஓடிமறைங் தொளிந்துவிடும் மாந்தர் தம்மில்
ஒருமையென்றும் நிலவும்! இன்பம் நிலவும்!
துன்பம் தேடியலைந் தாலுமினிக் கிட்டா தென்று
திருநாட்டில் வளம்பெருகும்! உழைப்பும், இன்பம்
கூடுவதும் எல்லார்க்கும் இயல்வ தாகும் குத்துவதும்
வெட்டுவதும் இல்லா தேகும்!

புதியதமி ழகத்தெவரும் எவர்க்கும் தொண்டு
புரிவதில்லை என்றநிலை நிலவும் ! நல்ல
மதிப்புலவர் கொள்கையுயர் வெய்தும்! இன்ப
மலர்ப்பூங்கா வெனத்திகழும் நாடு : மக்கள்
பொதுமையெனும் தேனருந்தி வாழ்வர் !
காதல் புரியுமெழில் வனிதையர்கள் இளைஞ
ரெல்லாம் இதயந்திறங் தளவளாவும் நிலவந் தின்பம்
இருக்கும்.எழில் இருக்கும்என முழக்கு வோமே!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *