
தமிழ் வளர்கிறது
நாரா. நாச்சியப்பன்
சிவனும் பெருமாளும் போற்றும் செந்தமிழ்
வாயிற் பிறந்து வழங்கு மொருமொழியைத்
தாய்மொழியென் றாரேனே சாற்றிடுவீர் ?-தாய்தான்
எடுத்தணத்துக் கொஞ்சி யிருந்தக்காற் சொல்லிக்
கொடுத்ததனை நெஞ்சிற் குறித்து.
பிறமொழியைக் கற்றறிந்து பேசுமொழி யாக்கி
யுறவுமொழி நீத்தாலென் ஒது ?-நறுந்தேனே
நேரான பாதைவழி கின்றிருந்தும் முட்காட்டைச்
சீராக்க வெண்ணுவதே வீண் !
விஞ்ஞானம் கற்பதற்கு வேற்றுமொழி வேண்டுமெனில்
அஞ்ஞான மேதமிழா லாமன் றே?-மெய்யான
எஞ்ஞான மும்தமிழில் ஏற்றிடலாம் மக்களுளத்
தஞ்ஞானங் தீர்ந்துவிட்டக் கால் !
பன்மொழியார் சேர்ந்திருக்கும் பாரதநன் னாட்டுமொழி
ஒன்றுபொது வேண்டாமோ ஒதிடுவீர் ?- ஒன்று
பொதுவானுல் மற்றவெலாம் போக்கற் ருெழியும்
அதையாய்ந் திடவேண்டா மா ?
அரசு பொதுமொழியால் ஆட்சிபெற மக்கள்
உரைபழகத் தாய்மொழியும் உண்டே !-வரிசையுறு
முத்தனைய பல்லாய், மொழிதான் அரசிழந்தால்
எத்தனையும் முன்னேருதே !
திருக்கோயில் தெய்வங்கள் பேணுத் தமிழை
விருப்போடு கொள்ளவா வேண்டும்?-சிரிப்போ(டு)
உயிர்வாங்கும் செந்தேனே யொண்டமிழ்பின் னோடி
மயலாளுன் அப்பெரு மாள் ?
உமைநத்தும் செஞ்சடையா னோதிக்
களிப்ப தமைவுற்ற ஆரியத்தை யன்ருே ?-சமைவுற்ற
பொற்சிலையே தேவாரம் போற்றி நடமிட்டான்
சிற்றம் பலத்தே சிவம் !
செந்தமிழை விட்டுச் சிவனும் பெருமாளும்
இந்தநாள் வேற்றுமொழி யேற்றதேன் ?-மந்தநன்க
முன்னளே சாதி வகுந்திட்ட மேற்படியார்
இக்காளே செய்தாரிடர் !
செந்தமிழர் நாட்டுத் திருக்கோயில் அத்தனையும்
எந்தநாள் இன்தமிழை ஏற்குமோ ?-அந்தகமாய்ப்
பக்திசெயும் அன்பர் பகுத்தறிவை மேற்கொண்டால்
அக்கணமே மானே அறி!
பகுத்தறிவை மேற்கொண்டால் பக்தி மறைந்து
மிகுத்திங்கு நாத்திகமோ மேவும் ?-தொகுத்த
மலர்க்கொண்டைக் காரிகையே வாலறிவன் நற்றாள்
தலைக்கொண்டால் நாத்திகமா சாற்று !



