

பகவத் கீதை
சி. சுப்பிரமணிய பாரதியார்
முன்னுரை
ஸ்ரீமத் பகவத் கீதையின் இத் தமிழ் மொழிபெயர்ப்பு எத்தகையது என உரைக்க எனக்குப் போதுமான தமிழ் ஞானமில்லை, ஆயினும், ஒவ்வொரு ஹிந்துவும் ஸ்ரீமத் கீதையைப் பாராயணம் பண்ணாது ஒரு நாளாயினும் வீண்போக்குதல் கூடாது. இத் தகையோர்க்கு இம் மொழிபெயர்ப்புடன் கூடிய இக்கீதை பெரிதும் பயன்படும்.
ஸபர்மதி ஆச்சிரமம்,
சுக்ல சதுர்த்தசி,
பௌஷ, 84.
மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி.



