கம்பர் நாற்பது 
வ. சுப. மாணிக்கம்

கம்பர் நாற்பது
வ. சுப. மாணிக்கம்

முன்னுரை

‘புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு’ என்று பாராட்டிப் பாடினார் தேசியக்கவி பாரதியார். தமிழ்நாட்டில் கம்பன் பிறந்தவூர் சோழநாட்டுத் தேரழுந்தூர் எனவும், உலகப் பெருங்காப்பியமான இராமாயணத்தைச் செவிநுகர் கனிகளாகப் பாடிப் புகழ்பெற்று மறைந்த ஊர் பாண்டிநாட்டின் நாட்டரசன்கோட்டை எனவும் வரலாறு சொல்கின்றது. ஆதலின், நாட்டரசன் கோட்டை வளாகத்தில் வாழும் நம் சிறுவர்களும் சிறுமிகளும் கம்பரின் செய்யுட்களைக் கற்பது கடமையும் பெருமையும் ஆகும்.

இளைய உள்ளங்களில் கம்பரின் பாடல் வித்துக்களைப் பதியவைக்கும் நோக்கோடு, இராமயணத்திலிருந்து எளிய இனிய நாற்பது பாடல்களைப் பொறுக்கிக் கருத்துரையும் எழுதிக் கம்பர் நாற்பது என்ற பெயரால் இச்சிறுநூலை ஆக்கித்தந்தார் அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள். வனப்பும் நயமும் சிறந்த இச் சிறுநூலை சிவசத்தி அறநிலையத்தின் சார்பாக நன்கு பரவும் நோக்கோடு வெளியிடுகின்றோம். கம்பரின் காப்பியப் பாடல்கள் சிலவேனும் பலர்க்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதிய நல்லன்பர் நாட்டரசன் கோட்டை திரு. ஏ. சத்தியமூர்த்தி அவர்கள் இந்நூல் வெளியிட்டிற்கு வேண்டும் துணை செய்தார்கள்.

இத் தொகுப்பினைக் கம்பரிடத்தில் ஈடுபாடு கொண்டவர் எவரும் கற்கலாம். சிறப்பாகப் பள்ளி மாணவ மாணவியர் கற்பது நல்ல தமிழறிவைத் தரும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 3 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *