Tag இலக்கியம்

தமிழ் வையை – கி. வா. ஜகந்நாதன்

தமிழ் வையை கி. வா. ஜகந்நாதன் தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றையன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும்…

சிலம்பில் ஈடுபட்டதெப்படி – ம. பொ. சிவஞானம்

சிலம்பில் ஈடுபட்டதெப்படி ம. பொ. சிவஞானம் “சிலம்பில் ஈடுபட்ட தெப்படி?” என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம். எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும். நான் ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டு காலம் அடைபட்டிருந்த போது, என் உடம்பு கரைந்து கரைந்து- எலும்பு…

கிழக்கும் மேற்கும் – அ. ச. ஞானசம்பந்தன்

கிழக்கும் மேற்கும் அ. ச. ஞானசம்பந்தன் 1969ஆம் ஆண்டு பூ.சா.கோ.நிறுவனத்தார் புரவலர் திரு. அரங்கசாமி நாயுடு அவர் களின் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு அழைத்தனர்; அவர்களே இத்தலைப்புக்களையும் தந்து பேசுமாறு பணித்தனர். தமிழாசிரியனின் எல்லைக்கு அப்பாற்பட்டுள்ள இத்தலைப்புக்கள் என்னை வியப்படையச் செய்தன. எனினும், ஒரு தமிழ் மாணவன் இத்தலைப்புக்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கின்றான் என்பதை அறியும்…

எல்லாம் தமிழ் – கி. வா. ஜகந்நாதன்

எல்லாம் தமிழ் கி. வா. ஜகந்நாதன் இதற்குமுன் நான் எழுதியுள்ள புது மெருகு என்ற புத்தகத்தைப் போன்றது இது. சங்க நூல்களில் உள்ள குறிப்புக்களைக் கொண்டு பின்னிய வாலாறுகளும், பிற காலத்துச் சதகங்களிலும் தனிப்பாடல்களிலும் உள்ள செய்திகளைக் கொண்டு உருவாக்கிய கதைகளும், கேள்வியினால் தெரிந்தவற்றை ஆதாரமாகக் கொண்ட கதைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்ப்…

சிலப்பதிகாரமும் தமிழரும் – ம. பொ. சிவஞானம்

சிலப்பதிகாரமும் தமிழரும் ம. பொ. சிவஞானம் தூங்கிக் கிடந்த தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பியவர், தலைவர் ம. பொ. சிவஞானம். ஒவ்வொரு தமிழ் மகனும் என்னுடைய வீட்டிற்கு நான் அதிகாரி என்று எண்ணும்படி செய்தவரும் அவரே. தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் பேசும் திறமையுள்ள சிலரில் முதல் வரிசையில் இருப்பவர் திரு. ம.பொ.சி. ஆனால் சிலருக்குப்…

வள்ளுவர் கண்ட மனையறம் – சுந்தர சண்முகனார்

வள்ளுவர் கண்ட மனையறம் சுந்தர சண்முகனார் தோற்றுவாய் திருவள்ளுவரும் திருக்குறளும் திருவள்ளுவரால் இயற்றப்பெற்ற திருக்குறள் தமிழ்நூல் மட்டுமன்று; தமிழர் நூல் மட்டுமன்று; உலக மொழிகள் பலவற்றுள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளதோர் உலக நூலாகும். இந்நூல், வடமொழி, இந்தி முதலிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, செர்மனி, இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்த்தெழுதப் பெற்றுள்ளது. இதனால் இதனை…

கண்ணகி கதை – அ. குமாரசாமிப் புலவர்

கண்ணகி கதை அ. குமாரசாமிப் புலவர் சோழ மண்டலத்திலே காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரத்திலே மாநாய்கன் என்னும் பெயருடைய செட்டியொருவன் இருந்தான். அச் செட்டியின் மகளாகிய கண்ணகியென்பவள் பொற்பினால் இலக்குமியென்றும், கற்பினால் அருந்ததி என்றும் கண்டோ ரெல்லாங் கொண்டாடிக் கை குவித்து வணங்கத்தக்க மிக்க மேன்மையும் நற்குண நற்செய்கைகளும் பெற்றவளாய்ச் சிறப்புற்று வளர்ந்து பன்னிரண்டாம் வயசென்னும் பருவத்தை…

தமிழ்நாட்டுச் செல்வம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாட்டுச் செல்வம் திரு. வி. கலியாணசுந்தரனார் தோற்றுவாய் உங்கள் சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசிய போது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன்.…

இன்ப மாலை – கி. வா. ஜகந்நாதன்

இன்ப மாலை கி. வா. ஜகந்நாதன் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் வரிசை யில் ஒன்றாகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு செய்யுட்களை உடையது. இதனை அகமென்றும், அகப்பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் அகத்துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுந் தொகை, நற்றினை, அகநானூறு என்ற மூன்றில் அடியளவினால் நீண்ட பாடல்களை உடையதாதலால் இதற்கு…