Tag நீதி நூல்கள்

திரிகடுகம்

நல்லாதனார் அருளிச் செய்த திரிகடுகம் ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் திரிகடுகம் என்பது கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறி வருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என…

களவழி நாற்பது

பொய்கையார் அருளிச் செய்த களவழி நாற்பது ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய உரையுடன் களவழி நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்க்கீழ் கணக்கு…

கார் நாற்பது

மதுரை கண்ணங்கூத்தனார்அருளிச் செய்த கார் நாற்பது ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் கார்நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க் கணக்கு நூல் பதினெட்டென்பது, ‘வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற்றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’ என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும்…

இன்னா நாற்பது

கபிலர் அருளிச் செய்த இன்னா நாற்பது ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் இன்னா நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற் கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப் பாட்டு,…

நறுந்தொகை

அதிவீரராம பாண்டியர்அருளிச் செய்த நறுந்தொகை ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந்தவரென்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் ‘கொற்கையாளி’ என வருதலால் அறியப்படு கின்றது. கொற்கை, பாண்டி மன்னர்கள் இருந்து அரசு புரியும் பதிகளிலொன்றாயிருந்ததென்பதைச்…

நன்னெறி

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்அருளிச் செய்த நன்னெறி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் நன்னெறி யென்னும் இந் நீதிநூல் ஏறக்குறைய இருநூற்றெண்பது ஆண்டுகளின் முன்பு விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் கவிஞர் பெருமானால் அருளிச் செய்யப் பெற்றது. சிவப்பிரகாசரின் தந்தையார் காஞ்சிபுரத்திலே தொண்டை மண்டல வேளாளர்க்குக் குருக்களாயிருந்த குமார சுவாமிதேசிக ரென்பவர். இவர்…

உலகநீதி

உலகநாதனார் அருளிச் செய்த உலகநீதி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவ ரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்று மில்லை.…

மூதுரை

ஒளவையார் அருளிச் செய்த மூதுரை ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் மூதுரை என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. கடைச்சங்க நாளிலே…

நல்வழி

ஒளவையார் அருளிச் செய்த நல்வழி ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய உரையுடன் நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. தமிழ்நாட்டிலே இளைஞரும்…

கொன்றை வேந்தன்

ஒளவையார் அருளிச் செய்த கொன்றை வேந்தன் ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள்…