உலகநீதி
உலகநாதனார்

உலகநாதனார் அருளிச் செய்த

உலகநீதி

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

அவர்கள் எழுதிய உரையுடன்

இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவ ரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்று மில்லை. இது பெரும்பாலும் பேச்சு வழக்கு நடையிலேயே அமைந்திருக்கிறது. இதிற் சொல்லப்பட்டன வெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் என்பதில் ஐயமில்லை. சிறுவர்களும் எளிதாகப் படித்துப் பாடம் பண்ணக் கூடியவாறு எளிய நடையில் ஓசை நலத்தோடு விளங்குவது இதற்குத் தனியாக உள்ள சிறப்பியல்பு ஆகும். இதனை இயற்றியவர் முருகக் கடவுளிடத்திலும், வள்ளி நாய்ச்சியாரிடத்திலும் பத்தியுடையவ ரென்பது ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்து வாயாக என நெஞ்சை நோக்கிக் கூறுதலால் வெளியாகின்றது. இவர் இருந்த காலம் இடம் முதலியன தெரியவில்லை. ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலியவற்றைப் போலவே இந்நூலும் தமிழ்நாட்டில் சிறுவர் சிறுமியர் அனைவரும் படித்துப் பயனெய்தற்குரியதாய் விளங்கு கின்றது.

இங்ஙனம்

ந. மு. வேங்கடசாமி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *