
திரிகடுகம்

நல்லாதனார் அருளிச் செய்த திரிகடுகம் ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் திரிகடுகம் என்பது கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறி வருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என…









