கிழக்கும் மேற்கும் 
அ. ச. ஞானசம்பந்தன்

கிழக்கும் மேற்கும்
அ. ச. ஞானசம்பந்தன்

1969ஆம் ஆண்டு பூ.சா.கோ.நிறுவனத்தார் புரவலர் திரு. அரங்கசாமி நாயுடு அவர் களின் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு அழைத்தனர்; அவர்களே இத்தலைப்புக்களையும் தந்து பேசுமாறு பணித்தனர்.

தமிழாசிரியனின் எல்லைக்கு அப்பாற்பட்டுள்ள இத்தலைப்புக்கள் என்னை வியப்படையச் செய்தன. எனினும், ஒரு தமிழ் மாணவன் இத்தலைப்புக்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கின்றான் என்பதை அறியும் நோக்குடன் இவற்றை எனக்குத் தந்ததாகவே கருதினேன். அதனாலேயே இப்பேச்சுக்களில் தமிழ் இலக்கியம் அதிகம் இடம் பெறவில்லை. இவற்றைத் தயாரிக்க முக்கியமாகப் பயன்பட்ட நூல்கள் நார்த்ரோப் என்பவர் எழுதிய ‘கிழக்கும் மேற்கும்’ என்ற ஆங்கில நூலும், மாஸ்கோ வெளியீடாகிய “Historical Materialism and Dialectical Materialism” என்ற நூலுமேயாகும். இவை தவிரச் சிவஞான சித்தியாரும் திரு. எஸ். இராதாகிருஷ்ணனுடைய பல நூல்களும் பயன்பட்டன.

இப்பேச்சுக்கள் முதலிலேயே எழுதப் பெற்றவையல்ல. வாய்மொழியால் பேசியதை ஒலிப்பதிவு செய்து, பின்னர் அதி லிருந்து தட்டச்சுச் செய்யப்பெற்றவை யாகும். எனவே, நடையில் ஓரளவு மாறுபாடு இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.பேச்சு மொழிச் சொற்கள் மிகுதியும் இடம் பெற் றிருப்பதற்கும் அதுவே காரணமாகும்.

‘இவர்தமக்கு யார் தாமோ தரம்’ என்று கூறத்தக்க வகையில் அனைத்திற்கும் ஆணி வேராய் நின்று இந்நிறுவனம் ஆல்போல் தழைத்து அறுகுபோல் படர்ந்து பலர்க்கும் நலம் புரியப் பெருந்துணையாய் இருப்பவர்கள் இயக்குநர், திருவாளர் ஜி.ஆர். தாமோதரனார் அவர்கள். என்னிடம் பேரன்பு கொண்ட அவர்கட்கும் பெரிதும் கடப்பாடுடையேன்.

இதனை நானே வெளியிட வேண்டும் என்று நினைத்தபொழுது மெர்க்குரி புத்தக நிலையத்தின் உரிமையாளர் திரு. எஸ். எஸ். கிருஷ்ணசாமியவர்கள் மனமுவந்து முன்வந்து இப்பணியை மேற்கொண்டார்கள். வளர்ச்சியில் பெரிதும் ஆர்வங்கொண்டு நலம் பல புரியும் திரு. கிருஷ்ணசாமி அவர்கட்கும் என்னுடைய நன்றி உரியதாகும்.

என் சொற்பொழிவைத் தட்டச்சுச் செய்து பார்த்தவர்கட்குத்தான் அது எத்துணைக் கடினமானது என்பது விளங்கும். எனினும் தம் பொறுமை முழுவதையும் பயன்படுத்தி இந்நூலை ஒரு வடிவு பெறுமாறு செய்த பெருமை பூ.சா.கோ. அறநிலையத் தொழிலாளர் நல அலுவலர் திரு. இருசுப் பிள்ளை யவர்கட்கும், பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கட்கும் உரியது. என் தம்பிய ராகிய அவர்கட்கு என் நல்வாழ்த்துக்கள் உரியன.

ஆசிரியன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *