தமிழர் கண்ட காந்தி 
ம. பொ. சிவஞானம்

தமிழர் கண்ட காந்தி
ம. பொ. சிவஞானம்

முன்னுரை

காந்தியடிகளைப் பற்றிய இச்சிறு நூல் அப்பெரியாரின் மறைவுக்குப் பிறகு யான் “தமிழ் முரசில்” எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பே யாகும். காந்தியடிகளின் வாழ்நாளில் அவரைப் பின்பற்றிய தொண்டர்களில் யானும் ஒருவன் என்பதைத் தமிழகம் நன்கறியும். அடிகளின் அடிச் சுவட்டைத் தொடர்ந்து செல்லத் துவங்கிய பிறகு எனது வாழ்க்கையே முற்றும் மாறிவிட்டது. அறி யாமை என்னும் இருளில் அல்லற்பட்ட என்னை தமது அன்பொளி காட்டி ஆட்கொண்டு அரசியல் வாதியாக்கிய அப்பெருமானின் பெருமையை விரி வாக எழுதுவதற்கு எனக்கு ஆசையிருந்தும் போதிய ஆற்றலில்லை. ஆம்; கற்றோருமறியாப் பேரறிவாளரன்றோ, காந்தியடிகள்.

என்றாலும், அடிகள் கொலையுண்டார் என்ற செய்தி கேட்டு ஆறாத் துயரால் யான் வெளியிட்ட கருத்துக்களை இன்ப நிலையத்தாரின் வற்புறுத்தலின் பேரில் இச் சிறு நூலாக உருவாக்க இசைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

29-1-1948
சென்னை

. பொ. சிவஞானம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *