Tag அரசியல்

அண்ணா ஜோதி – கலைஞர் மு. கருணாநிதி

அண்ணா ஜோதி கலைஞர் மு. கருணாநிதி உடன்பிறப்பே, காலை வெயில் என்றாலும் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருக்கிறது! நாங்கள் செல்லும் கார், திருச்சியிலிருந்து கரூரை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது! வழியில் சாலையில் ஒரு இளைஞன் கரூர் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்! அவன் கையில் கொழுந்து விட்டெரியும் ஒரு தீச் சுடர்! நெருப்பு, நிமிர்ந்து நின்றுதானே எரியும் உண்மையான…

ஆறுமாதக் கடுங்காவல் – கலைஞர் மு. கருணாநிதி

ஆறுமாதக் கடுங்காவல் கலைஞர் மு. கருணாநிதி இது கல்லக்குடியில் போர்க்களம் அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவானதிலிருந்து, சிறைவாசம் முடிய – நினைவில் நின்ற நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டு திராவிட இயக்கத்தின் வருங்கால சரித்திரத்திற்கு இதுவும் பயன்படலாம் என்ற ஆசையுடன் வெளியிடப்படுகிறது. –பதிப்பகத்தார்

கப்பலோட்டிய தமிழன் – ம. பொ. சிவஞானம்

கப்பலோட்டிய தமிழன் ம. பொ. சிவஞானம் பகுப்புரை இந்திய சுதந்தரப் போரில் ஈடுபட்டு, இன்னல் பல ஏற்றவர் வ.உ.சிதம்பரனார். தமிழரின் தன்மானத்தைக் காக்க, வீரர் சிதம்பரனார் கண்ட கனவுகளை இன்று நம்மிடையே இருந்து அதை நனவாக்கிக் கொண்டிருப்பவர் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். வீரர் சிதம்பரனாருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் சிறப்புப் பெயரை வழங்கி அவரது புரட்சிமிக்க செயல்களை…

வடலூரும் ஈரோடும் – திருக்குறள் வீ.முனுசாமி

வடலூரும் ஈரோடும் திருக்குறள் வீ.முனுசாமி தமிழகம், புழுதியிலே எறியப்பட்ட வீணையாக, சரிந்த கோட்டையாக, உடைந்த கண்ணாடியாகக் காட்சியளிக்கிறது. சிவவாக்கியர், கபிலர், இராமலிங்க அடிகளார் போன்ற புலவர்களெல்லாம், தமிழகத்தின் அவல நிலையைச் செப்பனிட முயன்றார்கள். கனல் தெறிக்கும் கருத்துக்களை அம்புகளாக்கி, கவிதை யெனும் வில்லிலே நாணேற்றி, சாதி, மத,சமயக் கோட்பாடுகள், பல தெய்வ வழிபாடுகளென்ற மூட நம்பிக்கை…

காந்தி யார்? – வெ. சாமிநாத சர்மா

காந்தி யார் ? வெ. சாமிநாத சர்மா இரங்கூனில் சிறந்த முறையில் நடந்துவந்த ஜோதி பத்திரிகையின் ஆசிரியர் எங்கள் சர்மாஜீ தமிழனின் சிந்தனையைத் தூண்டும் பல தலையங்கங்களை அதில் எழுதி வந்தார்கள். அவைகளில், ஒவ்வொரு வருடமும் காந்தியைப் பற்றி எழுதியவைகளை மட்டும் தொகுத்து இந்நூலாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றுள் காந்தி யார் என்ற முதல் அத்தியாயம் ஏற்கனவே…

காந்தியும் விவேகானந்தரும் – வெ. சாமிநாத சர்மா

காந்தியும் விவேகானந்தரும் வெ. சாமிநாத சர்மா செம்பொன் மேனி; சிறிய உருவம்; பெரிய ஆத்மா; உடைந்த பல்; உரத்த சிரிப்பு; ஒற்றையாடை; மூப்படைந்த இளைஞர்; ஓய்வுகாணாத உழைப்பாளி. இவர் காந்தி. ஆஜானுபாகு; அகன்ற நெற்றி; பரந்த கண்கள்; ரிஷப நடை; அரசனாக ஆளவேண்டியவர்; துவராடை யுடுத்த துறவியானார். உலகத்தைத் துறந்து விட வில்லை; உலகத்திலே வாழ்ந்தார்;…

உலகப் பெரியார் காந்தி – கா. ந. அண்ணாதுரை

உலகப் பெரியார் காந்தி கா. ந. அண்ணாதுரை மஹாத்மா காந்தி அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 1869, அக்டோபர் 2 காந்திஜி பிறப்பு 1881, ராஜகோட் ஹைஸ்கூலில் சேர்ந்தார். 1883, அன்னை கஸ்தூரிபாயை மணந்தார். 1888, செப்டம்பர், இங்கிலாந்துக்குப் பிரயாணம். 1891, ஜூன்,இந்தியாதிரும்பி வக்கீல்தொழிலில் ஈடுபட்டார். 1893, ஏப்ரல்,தென்னாப்பிரிக்கா பிரயாணம். 1896, இந்தியா திரும்பினார். 1896,…

ஆதி – திராவிடர் பூர்வ சரித்திரம் – D.கோபால் செட்டியார்

ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் வங்காள ராஜதானியின் மேற்கு அறைபாக வடங்களிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள பாகங்களிலும், இலங்கைதீவிலும் பெலுசிஸ்தான் தேசத்திலும் கலப்பற்ற திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் பதினோரு கோடியே முப்பதுலட்சம் ஜனங்கள்.இதைத்தவிர கலப்புற்ற திராவிடர்கள் இந்தியாவில் சுமார் பத்துகோடி ஜனங்களிருக்கிறார்கள். மகமதியர் ஆறுகோடி இந்தியாவிலிருக்கிறார்கள். இவர்கள் மங்கோலிய தூகி நாட்டாரின் வம்சமாகையால் இந்தியாவிலுள்ள சுமார்…

பழந்தமிழர் அரசியல் – சாமி. சிதம்பரனார்

பழந்தமிழர் அரசியல் சாமி. சிதம்பரனார் பழந்தமிழர் அரசியல் என்னும் இந்நூல் பல கட்டுரைகளின் தொகுப்பு. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் நான் எழுதிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி. பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சிதான் நிலைத் திருந்தது. அவர்கள் ஆளும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் விளங்கினார்கள். பண்டைத் தமிழ்…

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் – நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் நா. வானமாமலை தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் “இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்” என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய விவரங்கள் (facts) முழுவதும் மார்க்சீயப் பேரறிஞர் தேபி பிரஸாத் சட்டோபாத்யாயாவின் ‘Indian Atheism’ என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. ஆனால் இந்நூல் அந்நூலின்…