வடலூரும் ஈரோடும் 
திருக்குறள் வீ.முனுசாமி

வடலூரும் ஈரோடும்
திருக்குறள் வீ.முனுசாமி

தமிழகம், புழுதியிலே எறியப்பட்ட வீணையாக, சரிந்த கோட்டையாக, உடைந்த கண்ணாடியாகக் காட்சியளிக்கிறது. சிவவாக்கியர், கபிலர், இராமலிங்க அடிகளார் போன்ற புலவர்களெல்லாம், தமிழகத்தின் அவல நிலையைச் செப்பனிட முயன்றார்கள். கனல் தெறிக்கும் கருத்துக்களை அம்புகளாக்கி, கவிதை யெனும் வில்லிலே நாணேற்றி, சாதி, மத,சமயக் கோட்பாடுகள், பல தெய்வ வழிபாடுகளென்ற மூட நம்பிக்கை யெனும் நச்சரவத்தைத் தனிமையாக நின்று தாக்கினார்கள், கருவருக்கப்படமுடியாத அந்த மலைப் பாம்புகள் அவர்களைக் கல்லறைக் கனுப்பிவிட்டன !

சாதிமத பேதத்தைத் தனிமையாக நின்று தகர்க்க முடியாது என்பதைக் கண்ட கொள்கைக் கோமான் பெரியார், படை திரட்டுகிறார், பழமைப் புற்றுகளைப் படுகுழிகளாக வெட்டித் தள்ளுகிறார்; பகுத்தறிவு என்ற மண்வெட்டி கொண்டு சாதி, மதம், சமயம், சாத்திரம், புராணம், இதிகாசம், வைதீகம், என்ற பல ரக நச்சரவங்கள்- சீறிப் படமெடுத்து புற்றிலிருந்து வெளிக் கிளம்புகின்றன ; தமிழினத்திற்கு நஞ்சேற்றி விட்ட நாகப்படைகளை கனலிலேயிட்டு கருக்குகிறார்; கண்டதுண்டமாக்கி அவைகளை அதற்கென வாரீ சாக வரும் மதவெறி வேடுவர்களின் தடைகளைத் தகர்த் தெரிகிறார்; தமிழகம் இன்று ஏறுநடை போடுகிறது புத் துலகம் நோக்கி. அதற்கான விளக்கமே, “வடலூரும்- ஈரோடும்” என்ற இச்சிறு நூல்.

படிக்கப் படிக்கத் திகட்டாத பாணியிலே, அழகு தமிழிலே திருக்குறளார் தீட்டித் தந்திருக்கிறார். திருவள்ளுவர் பதிப்பகம் அவருக்கு வணக்கத்தினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழகமும் ஆதரவு தருமென்று எதிர்பார்க்கிறது.

புறப்படுங்கள் வடலூருக்கும் ஈரோட்டிற்கும்; அறிவு விருந்து காத்துக்கொண்டிருக்கிறது, புத்துலகச் சிற்பிகளுக்காக.

நா. வா. கலைமணி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *