freetamilbooks.com

freetamilbooks.com

தமிழ் நூல்களில் பௌத்தம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ் நூல்களில் பௌத்தம் திரு. வி. கலியாணசுந்தரனார் மனிதன் விலங்கினின்றுந் தோன்றினவன். அவனை விலங்கினின்றும் பிரிப்பது சமயம். விலங்கு+ சமயம் = மனிதன். எனவே மனிதனுக்குச் சமயம் இன்றி யமையாதது. அச்சமயம் ஒன்றா? பலவா? மெய்யறிவு விளங்கப் பெற்றவர்க்கும், அவ்வறிவுண்மையைக் கலையறிவால் உணர்ந்து, அதைக் குறிக்கொண்டு நிற்பவர்க்கும் சமயம் ஒன்றே. மெய்யறிவு விளக்கமாதல் நாட்டமாதல் பெறாதார்க்குச்…

தேன் பாகு – கி.வா.ஜகந்நாதன்

தேன் பாகு கி.வா.ஜகந்நாதன் கதைகள் கேட்பதற்குக் குழந்தைகள் விரும்புவர். அவர்கள் சுவைக்கும்படி கதை சொல்லப்பழங்காலத்தில் பாட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தை களின் தொணதொணப்புக்கு ஈடு கொடுக்க தினசரி கதைகளை இட்டுக்கட்டிச் சொல்வது வழக்கமாக இருந்தது. அப்படி இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட கதைகள் தாம் செவிவழியே தொடர்ந்து நாடோடிக் கதைகள் ஆயின. அந்த நாடோடிக் கதைகளைத் தழுவி…

திருக்குறள் கட்டுரைகள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

திருக்குறள் கட்டுரைகள் கி. ஆ. பெ. விசுவநாதம் பதிப்புரை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு 60-ஆம் ஆண்டு இன்று பிறக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர்கள் செய்துள்ள பணிகள் மிகப்பல இந்தி எதிர்ப்புப் போரில் அவர்களின் பேராற்றலையும் பேச்சுவன்மையையும் கண்டு தமிழகம் முழுவதும் வியந்தது; போற்றியது. தமிழரின் பாதுகாவலர்…

வத்ஸலையின் வாழ்க்கை – சாவி

வத்ஸலையின் வாழ்க்கை சாவி 1947-ம் வருஷம் ஜனவரி மாதம். கல்கி காரியாலயத்தில் என் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். ”ஆசிரியர் கூப்பிடுகிறார்!” என்று ஆபீஸ் பையன் வந்து அழைத்தான். பேனாவை அப்படியே மேஜை மீது வைத்து விட்டு ஆசிரியர் இருந்த அறைக்குப் போனேன். ஒரு நிமிஷம் ஆசிரியர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.…

வேட்டை நாய் – அழ. வள்ளியப்பா

வேட்டை நாய் அழ. வள்ளியப்பா 1. வேட்டை நாய் கொக்கரக்கோ!’ சேவல் கூவியது. படுக்கையில் படுத்திருந்த சிறுவன் துள்ளி எழுந்தான். ‘அம்மா! அம்மா !’ என்று அழைத்துக் கொண்டே அம்மாவின் அருகிலே ஒடினான். “என்னடா, என் கண்னே?” என்று அன்பாகக் கேட்டாள் அம்மா. “அம்மா. மாமாவின் ஊருக்குப் போகப் போகிறேன். போகட்டுமா, அம்மா?” இந்தக் கேள்வியைக்…

விளையும் பயிர் – கி. வா. ஜகந்நாதன்

விளையும் பயிர்கி. வா. ஜகந்நாதன் காலத்தில் இப்படி விளங்கியது என்று சொல்வது வாழ்க்கை வரலாறு பிற்காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த பெரியவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே அவர்களுடைய வரலாறுகளிலிருந்து அறிகிறோம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழியை உண்மைப் படுத்தும் நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் அந்த வரலாறுகளிலேக் காணலாம். சில பெரியவர்களின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விரித்து…

வழிவழி வள்ளுவர் – ரா. பி. சேதுப்பிள்ளை

வழிவழி வள்ளுவர்ரா. பி. சேதுப்பிள்ளை தமிழ் நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந் நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்று தொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமை யுலகம் பொன்னே போற் போற்றி வரு கின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், ‘பாட்டுக்கொரு…

வேலும் வில்லும் – ரா. பி. சேதுப் பிள்ளை

வேலும் வில்லும் ரா. பி. சேதுப் பிள்ளை வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால். ‘வேலுண்டு வினை யில்லை; வில்லுண்டு பயமில்லை’ என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அறித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் செம்மையும், வில்லின் பெருமையும்…

நாட்டியக்காரி – வல்லிக்கண்ணன்

நாட்டியக்காரி வல்லிக்கண்ணன் சமர்ப்பணம் அழகுக் கனவுகள் ஏந்திய அரும்பை மலரச் செய்கிறது பனித்துளி. வண்ண மலரின் இனிய மணத்தை எங்தம் எடுத்துச் செல்கிறது தென்றல். கலைஞன் உள்ளத்தில் கலைக்கனவுகள் மலர உதவும் பனித்துளி ரசிகனின் பாராட்டுதல். கலைஞனின் கலைமணம் எங்கும் பரவ உதவுவது ரசிகனின் ரசனை. என்வாழ்வும் பூங்காவில் ஆர்வமளிக்கும் பனியென, உற்சாகம் தரும் இன்பத்…

தமிழ்நாட்டவரும்மேல்நாட்டவரும் – மறைமலையடிகள்

தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் மறைமலையடிகள் ஓம் நம் தமிழ்நாட்டவர் பொருளையுந், தமிழ் நாட்டையடுத்துள்ள மற்றை இந்தியநாட்டவர் பொருளையும் மேல்நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டு வரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !