

நாட்டியக்காரி
வல்லிக்கண்ணன்
சமர்ப்பணம்
அழகுக் கனவுகள் ஏந்திய அரும்பை மலரச் செய்கிறது பனித்துளி.
வண்ண மலரின் இனிய மணத்தை எங்தம் எடுத்துச் செல்கிறது தென்றல். கலைஞன் உள்ளத்தில் கலைக்கனவுகள் மலர உதவும் பனித்துளி ரசிகனின் பாராட்டுதல்.
கலைஞனின் கலைமணம் எங்கும் பரவ உதவுவது ரசிகனின் ரசனை.
என்வாழ்வும் பூங்காவில் ஆர்வமளிக்கும் பனியென, உற்சாகம் தரும் இன்பத் தென்றல் போல வந்து சேர்ந்த இனிய நண்பர், திருவனந்தபுரம், திரு எஸ்.சிதம்பரம் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
வல்லிக்கண்ணன்



