நாட்டியக்காரி வல்லிக்கண்ணன்

கதைகளைப்பற்றி


கண்ணாடியில் நம்முடைய முகத்தைப் பார்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அதைப் போலவே நமது அகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டா கிறது. அந்த ஆசையைத் தீர்த்துவைப்பதுதான் கலை உலகு என்னும் கண்ணாடி.

திரு. வல்லிக்கண்ணன் ஒரு கலைஞன்; உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டும் கண்ணாடியைப்போன்ற தன்மையுடைய கலைஞன். அதன் விளைவாகத்தான் அகத்தின் மூலை முடுக்கும், எல்லைப்புறமும், அடிமட்டமும் அவர் கதைகளுக்கு விஷயமாகின்றன.

அதன் விளைவாகத்தான் மனத்தின் அழுக்கும் திருட்டுத்தனமும் அவர் கையில் படாதபாடு படுகின்றன.

“நாட்டியக்காரி” என்ற இத்தொகுதியில் அவர் கருத்தையும்,கலையையும் ஓரளவுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். “திருஷ்டிக் கோளாறு” என்ற கதையில் ஒரு எழுத்தாளன் வருகிறான். தன் மனைவியைக் கோபித்துக்கொள்ளும் பொழுது ‘பின்னால் நிற்காதே இப்படி முன்னால் வந்து தொலை’ என்று சீறுகிறான் உண்மையில் சீறுவது ஆசிரியர்தான். நம்முடைய உள்ளத்திலும், சமூகத்திலும் மறைந்து திரியும் உணர்ச்சிகளையும், ஊழல்களையும் கண்டு பின்னால் நிற்காதே முன்னே வந்து தொலை’ என்று புழுங்கி வெடிக்கும் ஆசிரியரின் பேச்சாகத் தொனிக்க வில்லையா?

ஏறக்குறைய எல்லாக் கதைகளையும் இந்த அடிப்படையின்மீது எழுப்பி இருக்கிறார். பரத நாட்டியத்தை இப்பொழுதெல்லாம் புகழுகிறோமல்லவா? உண்மையில் போற்றுவது நாட்டியத்தையா, நாட்டியக்காரியையா? நாமென்னவோ நடனத்தைப் புகழ்வதாகத்தான் நினைக்கிறோம். ஆனால் ஆசிரியரின் கூர்மையான கண்களுக்கு வேறொரு உண்மை புலனாகிறது. நாட்டியக்காரியின் மீது ஏற்படும் மோகம், நாட்டியத்தைப் போற்றுவதாக மாறுவேஷமிட்டு, நம்மை ஏமாற்றுகிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்து நமக்கு அந்தக் கதையில் காட்டுகிறார்.

இதே மாதிரி ஆண் பெண் உறவில் ஒளிந்திருக் கும் ரகசியங்களை ‘சிருஷ்டிக் கோளாறு’, ‘வாணியின் புதிர்’ என்ற கதைகளில் வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார். (இவை எப்படி இரண்டு கதையாகும்?) ‘பழகிய பால்’ முதலிய இந்த இனத்தைச் சேர்ந்தவை.

இதே கலைத்திறனுடன் சமூக அமைப்பையும். பொருளாதாரத் துறையையும் ஆசிரியர் சில கதைகளில் சோதித்திருக்கிறார். ‘வாழ்க்கை’, ‘தினசரிப் பிழைப்பு’, ‘காணிக்கை முதலிய நெஞ்சை உருக்கும் அழகிய சித்திரங்கள்.

இவ்வளவு கருத்தழகும், உயர் நோக்கும், நடை யழகும் நிறைந்த இக்கதைத் தொகுதிக்கு முகவுரை எதற்காக?

.பிச்சமூர்த்தி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *