நாட்டியக்காரி
வல்லிக்கண்ணன்

கண்ணோட்டம்


கொஞ்ச நேரம்தான் இருக்கிறது, மணி அடிப்பதற்கு மணியைப் பற்றியோ, மார்க்குகளைப் பற்றியோ கவலைப்படாத மாணவர் கள் காகிதத்தை மடித்துக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்.மணி அடித்தாலும், வாத்தியார் பிடுங்கும் வரை, எழுதிக்கொண்டே இருக்கப்போகிற ஒன்றிரண்டுபேர் வேகமாகப் பேனா ஓட்டுகிறார்கள். ‘திருப்பிப் படியுங்கள்… எழுதியதைத் திரும்பப் படித்துப் பாருங்கள்’ என்ற வாத்தியாரின் அதிகாரம் மற்றவர்கள் கண்களை தாங்கள் எழுதியவற்றின்மீது ஓடவைக்கிறது, அரைகுறை மன துடன், பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு, தாங்கள் எழுதியவற்றைத் திரும்பவும் படிப்பது என்பது கசப்பான காரியம்தான்.

ஆனால், தான் எழுதியவற்றை அச்சில் கண்டு திரும்பப் படித்துப் பார்ப்பதில் எழுத்தாளன தனி மகிழ்வு பெறுகிறான். சில வருஷங்கள் கழித்து திரும்பவும் படிக்கும்போது இன்பம் மட்டும் தானா ஏற்படுகிறது? அந்தக் கதைகளை எழுதத் தூண்டிய காரணங்கள் நினைவின் மேலோட்டத்துக்கு வருகின்றன, எவ்வளவோ எண்ணச் சுழிப்புகளை இசைத்துக்கொண்டு. அவ்வளவுதானா? சில சமயம் அதிருப்தியும் தலைகாட்டுகிறது.

இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942-ம் வருஷம் எழுதப்பட்டவை. 1948ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உருவானவை, இன்று பார்க்கும் பொழுது, சில கதைகளை வேறுவிதமாக எழுதியிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதற்காக நான் வருந்தவில்லை. வளர்ச்சியுற்ற எனது திறமையை எண்ணி மகிழவே மனம் முந்துகிறது. தனது சிருஷ்டியில் குறை காண முடியாத கலைஞன் திறமையில் பூரணத்துவம் பெற்றுவிட் டான் என்று திருப்திப்படுவதற்கில்லை. அது அவனது கற்பனைத் தேக்கத்தையே காட்டும்’ என்று கூறிய கலைஞன் கதை உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

இதில் உள்ள கதைகள் அத்தனையும் பொய் (கற்பனை என்பதன் அர்த்தம் இதுதானே!) என்று நான் சொன்னால் என்னை நானே ஏமாற்ற முயல்வதாகும், இந்த ‘உலகம் பொய், வாழ்வு பொய், எல்லாம் மாயை’ என்று கூறி எல்லோரையும் ஏமாற்ற நினைக்கும் வேதாந்தி மாதிரி. அதற்காக அத்தனையும் வாழ்வில் அப்படியே கடந்தது என்று சொல்லிவிட முடியாது. கலை என்பது வாழ்க்கையின் போட்டோ அல்ல. வாழ்க்கை ஒருவன் உள்ளத்திலே எழுப்பும் உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு அது. தான் அனுபவித்ததை மற்றவர்களும் உணரும்படி எடுத்துக்காட்டும் வித்தை. கதை சொல்லும் கலைஞன் தான் கூறுகிறவற்றை எல்லாம் தானே அனுபவிக்க வேண்டுமென்பதல்ல. அனுபவ அறிவு பிறரது வாழ்வைக் கவணிப்பதாலும், பிறர் அனுபவத்தைச் சொல்லக் கேட்பதனாலும் விசாலம் அடையலாம் அல்லவா? இவ்விதம் விசாலப் பார்கையால் உலகத்தை விழுங்கிக் கதைகளாய்ச் சித்திரித்துக் கொண்டிருந்தால், சிறுகதை இலக்கியத்திற்கு விஷயப் பஞ்சமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது உணர்வுற்ற விழிப்பும், தூங்காத சிந்தனையும் இருந்துவிட்டால், எந்த விஷயத்தையும் அழகாக அளந்துவிடலாம்!

இப்படித்தான் பிறந்தன இதில் உள்ள பல கதைகள். சரிப் பிழைப்புக்கு லாட்டரி அடிக்கும் ஜட்காவாலாவின் குதிரை ‘மக்கர் செய்து வண்டியை அந்தாடிக்க வைத்ததை ஸ்வாமி நெல்லையப்பா ஹரோட்டில் கும்பலோடு கும்பலாக நானும் நின்று கவனித்தேன். நடுத்தெருவிலே குழந்தையைத் துணி மூட்டையாக மதித்து வேடிக்கை பயிலும் கழைக்கூத்தாடியின் ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். (ஆனால் இதுவரை அதுபோன்ற கண்கட்டிவித்தையால் உயிர் துறந்தது குழந்தை என்று நான் கேள்விப்பட்டதுகூட இல்லை! அது எனது கற்பனைக் கோளாறு?) ரயிலில் செல்லும் அழகியின் கண்ணோட்டத்தைக் கவனித்திருக்கிறேன், சண்டித்தனம் செய்து, தந்தையின் கண்டிப்புக்கு உள்ளாகி மீண்டும் வாலாட்டும் பண்பு பெற்ற பையனை எனக்குத் தெரியும் கானும் எனது நண்பர் ஒருவரும் கோவிலுக்குப் போன

போது அலங்கார ஆடம்பரங்கள்தான் என் கண்களை உறுத்தின இவற்றையெல்லாம் கதைகளாக்க வேண்டும் என்ற ஆசையால் சிறு சம்பவங்களுக்கு ‘கண் மூக்கு காது எல்லாம் வைத்து உயிர் கொடுத்தேன்.

கதைக்குக் கால் உண்டா என்பார்கள். கால் மட்டுமல்ல. கண் மூக்கு, காது எல்லாமே வேண்டும். ஒன்றிரண்டு குறைந் தாலும், கதை கதையாக இராது. சொல் பிண்டம்தான்!’

‘நாட்டியக்காரி’ ‘மதனி’ ‘சிருஷ்டிக் கோளாறு’ ‘வாணியின் புதிர்’ ‘நூர்ஜஹான்’ ஆகியவைகளுக்கு இப்படித் திட்டமான அஸ்திவாரங்கள் உண்டு என்று சொல்வதற்கில்லை. கேட்டது. படித்தது நினைத்தது எல்லாம் கூடி மன அரங்கிலே நடனமிடுவதின் விளைவுகளாகவே அவை.

இவை பத்திரிகைகளில் வந்தவை – நாட்டியக்காரி ‘அணிகலம்’ ம்லரில், காணிக்கை ‘பிரசண்ட விகடன்’ மலரில், மதனி ‘சக்தி’யில், வாழ்க்கை ‘நவசக்தி’யில், பழகிய பால் ‘வீரசக்தி’யின், நூர்ஜஹான் ‘கிராம ஊழிய’னில், தெருக்கூத்து, தினசரிப் பிழைப்பு, கண்டிப்பு ‘இந்திராவில்’எதன் பிசகு, சிருஷ்டிக் கோளாறு, வாணியின் புதிர் ‘கலாமோகினி’யில், பத்திரிக்ச்சிரியர்களின் அன்புக்கு எனது நன்றி.

எனது கதைகளை ரசித்து மகிழ்வதுடன் திருப்தியுறாது, அழகான புத்தகமாக்க வேண்டும் என்று ஆர்வமுடன் முன்வந்த திரு எஸ். சிதம்பரம் அவர்களுக்கும், அன்புடன் ஒத்துழைத்த கோட்டாறு, திரு தே. ப. பெருமாள் அவர்களுக்கும் என் வந்தனங்கள் உரியன.

தம் பாராட்டுதல்கள் மூலம் எனக்கு உற்சாகமும், மேலும் உழைக்க ஆர்வமும் அளித்துவரும் ஸ்ரீ ந. பிச்சமூர்த்தி அவர்களுக்கு எனது இருதயபூர்வமான் நன்றியை இங்கு அறிவிப்பது சம்பிரதாயத்தால் அல்ல.

வல்லிக்கண்ணன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *