freetamilbooks.com

freetamilbooks.com

வண்டிக்காரன் மகன் – கா. ந. அண்ணாதுரை

வண்டிக்காரன் மகன்கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 ஆப்பக்கடை அன்னம்மாளிடம் அச்சம் கொள்ளாதவர்கள் அவலூரில் யாரும் இருக்கமுடியாது. அவ்வளவு துணிச்சல். யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காத சுபாவம். அப்படிப்பட்ட அன்னம்மாள் சோகமுற்று இருப்பது என்றால், ஏதோ பெரிய விபரீதம் நேரிட்டுவிட்டது என்றுதானே பொருள். விபரீதம்தான் நேரிட்டுவிட்டது. தன் மகள் காவேரியின் ஜாதகத்தைக் கேட்க அருணகிரி வருவான்…

பவழ பஸ்பம் – கா. ந. அண்ணாதுரை

பவழ பஸ்பம் கா. ந. அண்ணாதுரை பகுதி: 1 “சகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது, எது தெரியுமா? ஏவலப்பனுக்கு என்னாலே பெருங்கஷடம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப்…

பவள மல்லிகை – கி.வா. ஜகந்நாதன்

பவள மல்லிகைகி.வா. ஜகந்நாதன் இந்தப் புத்தகம் என்னுடைய ஐந்தாவது கதைத் தொகுதியாகும். இதற்குமுன் ‘கலைஞன் தியாகம்’ ‘நீலமணி’, ‘அறுந்த தந்தி’, ‘கலைச்செல்வி, என்ற கதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. இதில் எட்டுக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுதியின் பின்னாலே ‘கதைக்குக் கால் உண்டு’ என்ற கட்டுரையைச் சேர்த்திருக்கிறேன். அதில் உள்ளவற்றை இந்த முன்னுரையிலேயே சேர்த்திருக்கலாம். ஆனாலும் கதை…

நல்ல சேனாபதி – கி. வா. ஜகந்நாதன்

நல்ல சேனாபதி கி. வா. ஜகந்நாதன் தமிழ்நாட்டில் பல காலமாகவே புலவர்களும் புரவலர்களும் வாழ்ந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள். புலவர்கள் வீரத்தைப் பாராட்டுவார்கள்; கொடைத் திறத்தைப் பாடிப் புகழ்வார்கள். பெரிய போரில் வெற்றி பெற்ற பெரு மன்னர்களுடைய வரலாற்றை நாட்டு வரலாறுகளில் காணலாம். ஆயினும் சிறிய போர்களில் தம்முடைய வீரத்தைக் காட்டிய வீரர்களையும், மிகவும் சிக்கலான சமயங்களில்…

நளாயினி – கலைஞர் மு. கருணாநிதி

நளாயினி கலைஞர் மு. கருணாநிதி நளாயினி அழகான பெண், ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை – தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யௌவனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு…

நடுத்தெரு நாராயணி – கலைஞர் மு. கருணாநிதி

நடுத்தெரு நாராயணி விடிந்தால் தீபாவளி- இரவு முழுதும் ஊரெங்கும் வாண வேடிக்கைகள். தெருவுக்குத் தெரு- வீட்டுக்கு வீடு – போட்டி போட்டுக் கொண்டு வாணம் கொழுத்தி மகிழ்ந்தனர். சந்தர்ப்ப வாதிகளின் பச்சோந்தி உள் ளம் போல மத்தாப்புகள் பல நிறம் காட்டின. ஒரு சில அரசியல் தலைவர்களின் போராட்ட அறிவிப்புகள் போல அவுட் வாணங்கள் ஆகாயத்தில்…

அக்கினிக்குஞ்சு ! – கலைஞர் மு. கருணாநிதி

அக்கினிக்குஞ்சு !கலைஞர் மு. கருணாநிதி பாரதி விழாவில் தலைவர் கலைஞர் சென்னை கிண்டியிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றம் மற்றும் மாணவர் தமிழ்ப் பேரவை சார்பில், 29-10-1985 அன்று நடைபெற்ற பாரதி விழாவில், தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பேருரையை இந்நூல் வடிவில் தலைமைக் கழகம் பெருமையோடு வெளியிடுகிறது.

வானொலியிலே – கி.ஆ.பெ.விசுவநாதம்

வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நூற்றுக்கணக்கான பேச்சுக்கள், கேட்டவர்களுக்கு மட்டும் செவிக்குணவாகி, கேட்க முடியாதவர்களுக்கு நூல்வடிவில் வந்து பயன்படாது வானோடு வானாகக் கலந்துவிட்டன. பல மாதங்களுக்கு முன் திருச்சி வானொலியிலே பேசிய ஏழு பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட விரும்பினோம். உடனே இசைந்தார் அன்பர். இந்…

வள்ளிநாயகியின் கோபம் – கா. ந. அண்ணாதுரை

வள்ளிநாயகியின் கோபம் கா. ந. அண்ணாதுரை கடவுள் விஷயம் கடவுள் இருக்கிறார்! கடவுளுக்குத் தெரியும்! கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்! கடவுளுக்குப் பொதுவாக நட! கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! கடவுள் கைவிடமாட்டார்! கடவுளின்மீது பாரத்தைப் போடு! *** கடவுளைக் கண்டவர் இவர்—பெரிய ஞானி—மூடுடா வாயை! கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்? கடவுளா கொடுத்தார் —…

வாழ்க்கைக் கூத்து – கி. வா. ஜகந்நாதன்

வாழ்க்கைக் கூத்து கி. வா. ஜகந்நாதன் அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம்,…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !