Category ஆன்மீகம்

நாயன்மார் திறம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நாயன்மார் திறம் திரு. வி. கலியாணசுந்தரனார் “நாயன்மார்” என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட “சுதேசமித்திரன்” அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன; நூலுக்கு “நாயன்மார்…

நினைப்பவர்‌ மனம்‌ – திரு. வி. கலியாணசுந்தரனார்

நினைப்பவர்‌ மனம்‌திரு. வி. கலியாணசுந்தரனார் “குறியே போற்றி குணமே போற்றிநெறியே போற்றி நினைவே போற்றி” – மாணிக்கவாசகர் சகோதரிகளே! சகோதரர்களே! நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப்பெறுத் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தேகொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார்,அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப்போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின்ஒரு…

வேதாந்த சித்தாந்தம்‌ – மறைமலை அடிகள்

வேதாந்த சித்தாந்தம்‌ மறைமலை அடிகள் “ஆரணமார்க்கத் தாகமவாசி யற்புதமாய் நடந்தருளுங்காரணமுணர்த்துங் கையுநின் மெய்யுங் கண்கண் மூன்றுடைய வென்கண்ணேபூரணவறிவிற் கண்டிலமதனாற்போற்றியிப் புந்தியோடிருந்துதாரணியுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன்வேண்டிடத்தகுமே” சிவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு,ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங்களுமாம்.…

சிற்றம்பலம் – கி. வா. ஜகந்நாதன்

சிற்றம்பலம் கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டிலும் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியவை. இந்த மூன்று திருமுறைகளிலும் இப்போதுள்ள பதிகங்கள் 383. இவற்றில் முதல் திருமுறையில் 136 திருப்பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்களும், மூன்றாந் திருமுறையில் 125 பதிகங்களும் அடங்கியுள்ளன. திருமுறைகண்ட புராணத்தில் நம்பியாண்டார் நம்பிகள், “பண்புற்ற திருஞான…

ஞானக் கொழுந்து – கி. வா. ஜகந்நாதன்

ஞானக் கொழுந்து கி. வா. ஜகந்நாதன் சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாக அமைந்தது திருமந்திரம். இதனை இயற்றியவர் திருமூலர். அவர் கைலாயத்தில் திருநந்திதேவருடைய திருவருள் பெற்ற சிவயோகிகளுள் ஒருவர். அவர் அணிமாதி சித்திகள் எட்டும் கைவரப் பெற்றவர். பொதிகை மலையில் வாழும் அகத்தியருக்கு நண்பர். தென்னாடு சென்று அம் முனிவருடன் சில காலம் இருந்து வரலாம்…

மந்திரங்கள் என்றால் என்ன? – அ. ச. ஞானசம்பந்தன்

மந்திரங்கள் என்றால் என்ன? அ. ச. ஞானசம்பந்தன் இன்றைய உலகில் எந்தப் பகுதியில் வசிப்பவர் களாக இருப்பினும் நம் அனைவருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதை அறிய முடியும். வறியவர், செல்வர், இளையவர், முதியவர், செல்வம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், வறுமை மிகுந்த நாட்டில் வசிப்பவர், நாகரிகம் மிகுந்த நாட்டில் வசிப்பவர், அல்லாத பகுதிகளில் வசிப்பவர், கற்றவர்,…

அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார்

அமுத மொழிகள் – குன்றக்குடி அடிகளார் ‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் ஒரு பழமொழி உண்டு ! அறிஞர் தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சும் எழுத்தும் அமுதத்தை ஒத்த அருள் மொழிகள் ஆகும். அவரது கருத்துக்களை ஒன்று திரட்டி ‘அமுதமொழிகளாக ‘ வெளிவருகிறது இந்த நூல். இனிய கருத்துக்கள், சிந்தனை தரும் முத்துக்கள், அத்துணையும் தேன்…

ஆலயங்கள் சமுதாய மையங்கள் – குன்றக்குடி அடிகளார்

ஆலயங்கள் சமுதாய மையங்கள் குன்றக்குடி அடிகளார் தமிழர் நாகரிகம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டது. இந்த உண்மையினைத் திருக்கோயில் கல்வெட்டுகளும் திருமுறைகளும் எடுத்துக் கூறுகின்றன. புதுமை என்பது சூன்யத்திலிருந்து தோன்றுவதில்லை. முதிர்ந்த பழைமைதான் ஒரு புதுமையைப் பிரசவிக்கிறது. இதுவே வரலாற்றுண்மை. சிலர் பழைமையை மலடாக்கிப் புதுமையின் விரிவைத் தடை செய்து வருகின்றனர். இது வளரும் போக்குடைய வரலாற்றுக்கு…

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி – வெ. சாமிநாத சர்மா

ஸ்ரீ ராமகிருஷ்ணர் – ஒரு தீர்க்கதரிசி வெ. சாமிநாத சர்மா கடவுளோடு இரண்டறக் கலந்து வாழக் கூடிய பக்குவம் பெறாதவர்கள், கடவுளோடு கலந்து வாழ்கின்றவர்களோடவாவது வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அறிஞர்கள். இப்படி முயற்சி செய்தால் நமது மனம் ஒழுங்குபடும். அது, தன்னுடைய இஷ்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லாமல் நம்முடைய இஷ்டத்திற்கு அது…

இலக்கியத்தில் வேங்கட வேலவன் – பேரா. சுந்தரசண்முகனார்

இலக்கியத்தில் வேங்கட வேலவன் பேரா. சுந்தரசண்முகனார் குறள்கள் : “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.” –(355) “எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.”–(423)