Category கட்டுரைகள்

தமிழ்த் திருமண முறை – மயிலை சிவமுத்து

தமிழ்த் திருமண முறைமயிலை சிவமுத்து பதிப்புரை ⁠தற்போது தமிழ்நாடு பல துறைகளில் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. பற்பல துறைகளில் சீர்திருத்தம் முகிழ்த்து வருகிறது. அறிவிலே புரட்சி, வாழ்க்கையிலே புரட்சி ஏற்பட்டு வருகிறது. இந்நிலை மேன்மேல் வளர வேண்டும். இத்தகைய புரட்சிகளில் ஒன்றுதான் இன்று நடைபெறும் தமிழ்த் திருமணம். தற்காலத்தே பேரறிஞர் அண்ணா அவர்களின் அரிய முயற்சியினால்…

தமிழ் மருந்துகள் – கி.ஆ.பெ. விசுவநாதம்

தமிழ் மருந்துகள் கி.ஆ.பெ. விசுவநாதம் மதிப்புரை ‘மருந்து’ என்ற சொல்லுக்குப் பண்டைய மருத்துவப் புலவர்களான சித்தர்கள் மிக உயர்ந்த பொருள் கொடுத்திருந்தனர். மறுப்பதுடல்நோய் மருந்தென லாகும்மறுப்ப துளகோய் மருந்தெனல் சாலும்மறுப்ப திணிநோய் வாரா திருக்கமறுப்பது சாவை மருந்தென லாமே எனும் செய்யுள் இதனை வலியுறுத்துகிறது. மக்களின் உணவு செயல்கள் ஒவ்வாமையாலே உடலிலுள்ள வளி, தீ, நீர்,…

தொலைவிலுணர்தல் – மறைமலையடிகள்

தொலைவிலுணர்தல் மறைமலையடிகள் முதற்பதிப்பின் முகவுரை இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் அதாவது விரோதி கிருது ஆண்டு (1911) சித்திரைத் திங்களில் யாம் எழுதத் துவங்கிய தொலைவிலுணர்தல் என்னும் இவ்வுரை நூல், எமது ஞானசாகரம் என்னும் அறிவுக்கடலின் ஆறாந்திருமலரிலும் எட்டாந்திருமலரிலும் ஒன்பதாந் திருமலரிலும் 96 பக்கங்கள் வரையில் வெளிவந்து, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாந் திருமலர்களில்…

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் – மறைமலையடிகள்

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் மறைமலையடிகள் Preface Of the three kingdoms in nature into which the created things are comprehensively classified, man finds his place fixed in the animal kingdom. Though the animal and the vegetable are alike in having, in…

சங்க கால வள்ளல்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

சங்க கால வள்ளல்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் முன்னுரை ‘சங்க கால வள்ளல்கள்’ என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கடையெழு வள்ளல்களின் வரலாற்றை முறைப்படி அறிவிக்கும் ஒரு நூலாகும். இது பெரிதும் புறநானூற்று நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தலின், இன்னோரன்ன வரலாறுகள் பலவற்றை அந்நூலினின்று மாணவர்கள் படித்தற்குத் துணைசெய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்னும் எண்ணங்கொண்டே…

உணவு நூல் – மயிலை சீனி. வேங்கடசாமி

உணவு நூல் மயிலை சீனி. வேங்கடசாமி முகவுரை மனிதருக்குப் பலப்பல காரணங்களினாலே பலப்பல நோய்கள் உண்டாகின்றன. நோய்களைத் தீர்க்க சிகிச்சைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோய் வந்தபிறகு மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பதைவிட நோயை வராமலே தடுப்பது மிக நல்லது. சரியான உணவைத் தகுந்த முறைப்படி உட்கொள்ளத காரணத்தினாலே நோய்கள் உண்டாகின்றன. தகுந்த உணவை தகுந்த முறைப்படி…

நாற்பெரு வள்ளல்கள் – மா. இராசமாணிக்கனார்

நாற்பெரு வள்ளல்கள் மா. இராசமாணிக்கனார் ஆக்கியோன் அறிவிப்பு இந்நூல் தந்நலங் கருதாத் தனிப்பெரு வள்ளல்களாய்த் தமிழ் நாட்டிற் பெருமையுற்று விளங்கிய பாரி, ஆய், அதியன், குமணன் என்போரது வரலாற்றைக் கூறுவது. இது புறநானூற்றைப் பெரும்பான்மை தழுவியும், அகநானூறு நற்றிணை முதலிய பிற இலக்கியங்களைச் சிறுபான்மை தழுவியும் ஆராய்ந்து எழுதப் பெற்றதாகும். இதில், பண்டைத் தமிழ் வேந்தர்,…

இமயமும் குமரியும் – கி. வா. ஜகந்நாதன்

இமயமும் குமரியும் கி. வா. ஜகந்நாதன் முகவுரை தமிழ் இலக்கியங்களிலே புகுந்து இன்பம் நுகரும் போது எத்தனையோ கருத்துக்கள் தோன்றுகின்றன. ஒரே புலவர் பல இடங்களில் சொல்லியிருக்கும் செய்திகளை ஒப்பு நோக்குவதில் ஒருவகைச் சுவை உண்டாகிறது. ஒரே கருத்தைப் பல புலவர்கள் வெவ்வேறு நூல்களிற் சொல்லியிருப்பதைக் கவனிக்கும் போது ஒருவகை இன்பம் எழுகிறது. சிலசில சமயங்களில்…

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – திரு. வி. கலியாணசுந்தரனார்

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை திரு. வி. கலியாணசுந்தரனார் முதற்பதிப்பின் முன்னுரை உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது. பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும்…

உடல் நூல் – கா. சுப்பிரமணிய பிள்ளை

உடல் நூல் கா. சுப்பிரமணிய பிள்ளை முன்னுரை நாம் இவ்வுலகில் நன்கு வாழ்வதற்கு நம்முடைய உடம்பானது நோயற்ற சுகநிலையிலிருக்க வேண்டியது அவசியம். நமக்கு எப்படி பசி, தாகம், நோய் முதலியன உண்டாகின்றன? நமக்கு எதனால் சுத்தமான காற்று, நீர், உணவு முதலியன இன்றியமையா தனவாயிருக்கின்றன? பொருள்களையறிந்து அநுபவிப்பதற்கு ஐம் பொறிகளும் பிற உடற் கருவிகளும் எப்படிப்…