சங்க கால வள்ளல்கள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

சங்க கால வள்ளல்கள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

முன்னுரை

‘சங்க கால வள்ளல்கள்’ என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கடையெழு வள்ளல்களின் வரலாற்றை முறைப்படி அறிவிக்கும் ஒரு நூலாகும். இது பெரிதும் புறநானூற்று நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தலின், இன்னோரன்ன வரலாறுகள் பலவற்றை அந்நூலினின்று மாணவர்கள் படித்தற்குத் துணைசெய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்னும் எண்ணங்கொண்டே இஃது எழுதப்பட்டுள்ளது. பிறமொழிச் சொற்கள் பெரிதும் கலவாது, செந்தமிழ் மொழிச் சொற்களையே துணையாகக்கொண்டு எழுதப்பட்டிருப்பதால், தனித் தமிழ் நடை எழுத விழையும் மாணவர்கட்கு இந்நூல் துணை செய்யும் என்பதும் என் துணிபு.

இந்நூலைத் தமிழ் உலகம் ஏற்று, என்னை இத் துறையில் மேன்மேலும் ஊக்கத் துணைபுரியும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இங்ஙனம்,
பா. து. க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !