

நாற்பெரு வள்ளல்கள்
மா. இராசமாணிக்கனார்
ஆக்கியோன் அறிவிப்பு
இந்நூல் தந்நலங் கருதாத் தனிப்பெரு வள்ளல்களாய்த் தமிழ் நாட்டிற் பெருமையுற்று விளங்கிய பாரி, ஆய், அதியன், குமணன் என்போரது வரலாற்றைக் கூறுவது. இது புறநானூற்றைப் பெரும்பான்மை தழுவியும், அகநானூறு நற்றிணை முதலிய பிற இலக்கியங்களைச் சிறுபான்மை தழுவியும் ஆராய்ந்து எழுதப் பெற்றதாகும். இதில், பண்டைத் தமிழ் வேந்தர், வள்ளல்கள், குடிகள், பரிசிலர், புலவர் என்போர்தம் நாகரிக வாழ்க்கையும் குணாதிசயங்களும், நிலப் பகுதிகளின் தோற்றம், இயற்கை வனப்பு இன்ன பிறவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல், இறுதியில் அருபதங்கட்குப் பொருள் பெற்றுள்ளது.
இச்சிறியவொரு நூலைப் பரிசோதித்து மதிப்புரை அளித்துதவிய தமிழ்ப் பேராசிரியர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கட்கு எனது நன்றி என்றும் உரித்தாகுக.
மா. இராசமாணிக்கம்



