எங்கள் பாட்டி – குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா

எங்கள் பாட்டி – பாடல்

பாட்டி எங்கள் பாட்டி எல்லாப்
பல்லும் போன பாட்டி.
கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்
கேட்கச் செய்யும் பாட்டி.

கடின மான பண்டம் – அதைக்
கடிக்கத் தெரியாப் பாட்டி.
படிப்பே யில்லாப் பாட்டி. – ஆனால்,
பலவும் தெரிந்த பாட்டி.

விடுக தைகள் போட்டே – என்னை
விழிக்க வைக்கும் பாட்டி.
குடுகு டுவய தாச்சு கையில்
கோல்பி டிக்கும் பாட்டி.

அப்பா அடித்துப் போட்டால் என்னை
அணைத்துத் தேற்றும் பாட்டி.
தப்போ, தவறோ செய்தால் என்னைத்
தடுத்துத் திருத்தும் பாட்டி.

சாய்ந்து மடியில் படுத்தால் என்னைத்
தட்டிக் கொடுக்கும் பாட்டி.
நோய்கள் ஏதும் வந்தால் – அதை
நொடியில் போக்கும் பாட்டி.

எங்கள் பாட்டி போலே – யாரும்
எங்கும் கண்ட தில்லை.
தங்க மான பாட்டி அவளை
சாமி காக்க வேணும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *