மணமக்களுக்கு
கி.ஆ. பெ. விசுவநாதம்

தமிழ்த் திருமண முறை

நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் M.A., B.L. அவர்களும், தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களும்,

நடத்தி வந்தவை

1.தமிழ்த்தாய் வாழ்த்து-இறைவணக்கம்

2.திருமணத்தை நடத்திவைக்கத் தலைவரை வேண்டுதல்

3.தலைவர் முன்னுரை

4.மணமகனுக்குத் தாய்மாமன் மலர்மாலை அணிதல்

5.மணமகளுக்குத் தாய்மாமன் மலர்மாலை அணிதல்

6.மணமகன் பெற்றோர் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்

7.மணமகள் பெற்றோரின் திருவடிகளில் சந்தனம், மலர் வைத்து வணங்கி எழுதல்

8.மணமகன் உறுதிமொழி :

“தாய்மார்களே! பெரியோர்களே! தங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் அருகிலுள்ள திருச்செல்வி… யை நான் இன்று என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ளுகிறேன். வாழ்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்து, சமஉரிமை வழங்கி, வள்ளுவர் நெறி நின்று. இல்லறத்தை இனிது நடத்துவேன் என உங்கள் முன்பு உறுதி கூறுகிறேன்”

9. மணமகள் உறுதிமொழி: “யானும் அவ்வாறே உறுதி கூறுகிறேன்”

10. தேங்காய் பழத்தட்டு ஒன்று மங்கல நாணுடன் பெரியோரின் வாழ்த்துக்காகச் சென்று வருதல்

11. உதிரிப் பூக்களை வாழ்த்துவதற்காகத் தாய்மார்களுக்கும் புெரியோர்களுககும் வழங்குதல்

12. திருப்பூட்டுதல்

13. வயது முதிர்ந்த பெண்களிற் சிலர் மங்கல நாணில் சந்தனம், குங்குமம் வைத்து வாழ்த்துதல்

14. வயது முதிர்ந்த ஆண்களிற் சிலர் மணமக்களுக்குத் திருநீறு இட்டு வாழ்த்துதல்

15. மணமகனுக்கு மைத்துனன் மோதிரம் அணிதல்

16. மைத்துனனுக்கு மரியாதை செய்தல்

17. மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு மாறி உட்காருதல்

18. சர்க்கரையை மணமக்களுக்கு வழங்கி, மற்றவர்க்கும் வழங்குதல்

19. நல்லறிஞர் சிலர் மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குதல்

20. தலைவர் முடிவுரை

21. மணமக்களைப் பொன்னாலும் பொருளாலும் வாழ்த்தி,பாலும் பழமும் கொடுத்தனுப்புதல்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *