தெய்வ ஜனனம் – க. நா. சுப்ரமண்யம்

ஜோதி நிலையத்தின் ஆறாவது மலராக தெய்வ ஜனனம் எனும் இந்த நூலை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறோம். இதன் ஆசிரியர் ஸ்ரீ. க. நா. சுப்ரமண்யத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய அவசியமில்லை. முதல் முதலாக அவருடைய கதைகள் ஜோதி மலராக வெளிவருவதைக் குறித்துப் பெருமை அடைகிறோம்.

காகித விலை கட்டுக்கடங்காமல் ஏறி விற்கும் இந்தக் காலத்திலும் கூடுமான வரையில் சிக்கன முறைகளைக் கையாண்டு குறைந்த விலையில் புஸ்தகங்களை வெளியிட வேண்டுமென்பதே எங்களுடைய நோக்கம். இந்த வரிசையில் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்களுடைய நூல்களைப் பிரதி மாதமும் வெளியிட ஏற்பாடு செய்துள்ளோம் – தமிழ் அன்பர்களின் ஆதரவு உண்டு என்ற நம்பிக்கையில். எதிர்பார்த்த அளவு எங்களுக்கு ஆதரவு அளித்து வருவது பற்றித் தமிழ் வாசகர்களுக்கு எங்களுடைய நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி குறுகிய காலத்தில் இந்த நூலை எழுதித்தந்த ஸ்ரீ. க.நா. சுப்ரமண்யம், பீ.ஏ. அவர்களுக்குத் தமிழ் வாசகர்களின் சார்பாக எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

ஜோதி நிலையம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *