பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் 
நாரா. நாச்சியப்பன்

பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
நாரா. நாச்சியப்பன்

முயல் குட்டிகளை வைத்து முன்னே ஒரு கதைப் புத்தகம் எழுதினேன். அந்தப் புத்தகம் முழுவதும் எல்லாக் கதைகளும் முயல் குட்டிகளைப் பற்றியே அமைந்தது. அதைப் போலவே சிட்டுக்குருவிகளை வைத்துக் கதை எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே எழுதத் தொடங்கினேன்.

சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை. அவை வால் வெட்டிப் பறக்கும் போதும், குந்தும் போதும், இரை கொத்தும் போதும், நடக்கின்ற நாடகம் கண்ணுக்கு விருந்து சலிப்புத் தராத நல்ல பொழுது போக்கு. சிட்டுக் குருவிகளைப் பார்க்கின்ற போதே நம் உள்ளத்தில் ஒரு துள்ளல் ஏற்படுகிறது. சிறு பிள்ளைகள் துறு துறு வென்று இருந்தால் சிட்டுக்குருவி போல் இருக்கிறான் என்று சொல்லுவார்கள். சிட்டுக் குருவிகளின் செயல்களைச் சுவைத்துச் சுவைத்துப் பாவேந்தர் பாரதிதாசன் பல பாடல்கள் எழுதியுள்ளார். இப்படிப்பட்ட சிட்டுக் குருவிகளை வைத்து இங்கே ஐந்து கதைகள் எழுதியிருக்கிறேன்.

இந்த ஐந்து கதைகளும் புதிய கற்பனையில் பிறந்தவை, சின்னஞ் சிறுவர்களுக்கு உகந்தவை. படிக்கச் சுவை கூட்டு பவை, அறிவுக் கருத்துக்களை யூட்டுபவை. உள்ளத்தில் புதிய எண்ணங்களை விதைப்பவை. பண்பை வளர்ப்பவை:

சிறுவர் சிறுமியர்க்கு இக்கதைகள் என் அன்புப் பரிசுகள்!

முன் வெளிவந்த முயல் கதைகளுக்கும் இந்த சிட்டுக் கதைகளுக்கும் படம் வரைந்து உதவிய ஒவியர் தென்னன் அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றி!

        நாரா. நாச்சியப்பன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *