

காக்கைகளும் கிளிகளும்
ந. பிச்சமூர்த்தி
தற்கால தமிழ் இலக்கியத் துறையில் சிறுகதை, கவிதை ஆகிய இரு பிரிவுகளும் வளம் பெருக கணிசமாக பங்கு செலுத்தி இருப்பவர் ந.பிச்சமூர்த்தி.
அவரது நாலைந்து சிறுகதை தொகுப்புகளும் இரண்டு கவிதை தொகுப்புகளும் ஒரு நாடகமும் வெளி வந்திருக்கின் றன. அவர் இவை தவிர பல எழுதி இருக்கிறார். ஓரங்க நாடகங்கள், ‘மனநிழல்’ என்ற கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.
இவற்றோடு பிச்சமூர்த்தி சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருக்கிறார். அவற்றை தொகுத்து ‘காக்கைகளும் கிளிகளும்’ என்ற இந்த கதை தொகுப்பு வெளிவருகிறது. இவை 1994 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.
பிச்சமூர்த்தி 1900ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர். ஏழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்து 1967-ல் டிசம்பர் 4-ம் தேதி காலமானார்.
சி. சு. செல்லப்பா



