

சைவசித்தாந்த உண்மை வரலாறு
கா. சுப்பிரமணிய பிள்ளை
சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பது செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கட்டாளின்கண் திருவாளர் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் எழுதிய சைவசித்தாந்த வரலாறேயாம்.
தன்கண் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களின் இயல்பும் தொடர்பும் எனைத்தென்றும், சைவநெறி பண்டைத் தமிழ் மக்கள் நெறி யேயாமென்றும், சிவம் என்ற சொல் வடமொழிக்குரியது என்று கூறுவார் மயக்கக் கூற்றைத் தக்க சான்றுகள் கொண்டு மறுத்து அது தமிழ்ச் சொல்லேயாமென்றும், தமிழில் மந்திரங்கள் உளவென்றும் விளக்கப்பெற்றிருக்கின்றன. இது சாத்திர ஆராய்ச்சியாளர்க்கும் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கும் பெரிதும் பயன்படும். இதனை எழுதித் தமிழுலகிற்குப் பயன்படுத்திய ஆசிரியருக்கு நிரம்பவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.



