

சங்கிலிக் குறவன்
வெ. இராமலிங்கம் பிள்ளை
கவிஞரின் ஆசி
★
சிரஞ்சீவி இராமனுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் வந்தது. நான் டில்லிக்குப் போயிருந்து இரண்டு நாள் முன்தான் வந்தேன். உன்னைப் பார்க்க 4-9-1954 மாலை தமிழ்ப் பண்ணை பக்கம் வந்தேன்.
நீ அங்கே கிடைக்க வில்லை.
‘சங்கிலிக் குறவன்’ என்று நான் முன் எழுதிய கட்டுரைகளை நீ புத்தகமாக்கி வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆசீர்வாதத்தோடு அனுமதியளிக்கிறேன். வெளியிடுக வாழ்க. நலம்.
அன்புள்ள
வெ. இராமலிங்கன்.



