
சங்கிலிக் குறவன்
வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்புரை
“சங்கிலிக் குறவன் ” முதலிய கதைகளை நூல் வடிவில் வெளியிட கவிஞர் அவர்களிடம் அனுமதி கோரினோம். அன்னார் அனுமதியுடன் ஆசியும் தந்தார்கள்,
சங்கிலிக் குறவன், இலுப்பமரப் பிசாசு என்ற கதைகள், கவிஞர் தன் தாயார் சொல்லக் கேட்பது போன்று எழுதப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கவிஞரின் தாயன்பு வெளிப்படுவதோடு, மக்களுக்குக் கதையின் மூலம் நல்ல கருத்துக்களையும் பண்பாட்டையும் புகட்டிய வீரப் பெண்மணிகளின் வரிசையில் அன்னாரும் இடம் பெறுகிறார்,
கவிஞரின் தகப்பனார் ஏட்டு வெங்கட்ராம பிள்ளை தாமே துப்பறிந்து கோயில் திருட்டுச் சம்பவத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் உத்தியோகத்தில் அவர் காட்டிய திறமை வெளிப்படுகிறது. அக்கதையைக் கவிஞர் தகப்பனார் கூறுவது போல் அமைத்து கதைக்கு மேலும் மெருகு கொடுத்து சுவை சொட்டச் சொட்டக் கூறுகிறார். இது படிப்போருக்குப் பேரின்பமளிக்கும்.
இதனை நூல்வடிவில் வெளியிட அனுமதி அளித்து அத்துடன் ஆக்கம் தரும் வகையில் ஆசியும் அளித்த கவிஞருக்குப் பெரிதும் நன்றி கடப்பாடுடையேம்.
ராமன் பதிப்பகத்தார்.



