சங்கிலிக் குறவன்
வெ. இராமலிங்கம் பிள்ளை

கவிஞரைப் பற்றி. . .

1888-ம் வருடம் அக்டோபர் திங்கள் 19-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று நாமக்கல் கவிஞர் மோகனூரில் பிறந்தார். மோகனூர் சேலம் மாவட்டத்தின் தென் கோடியில் காவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமம். இவரது இயற்பெயர் வெ. ராமலிங்கம் பிள்ளை. தந்தையார் பெயர் ஏட்டு வெங்கட்ராம பிள்ளை. தாயாரின் பெயர் அம்மணியம்மாள். ஆறு பெண்களுக்குப்பின் எட்டாம் மகவாக – அதுவும் ஆண்மகவாக கவிஞர் தோன்றிய காரணத்தால் செல்வச் சிறப்பாக வளர்ந்து வரலானார். 1909-ல் முத்தம்மாளை மனைவியாகக் கொண்டார். உயர் நிலைக் கல்வி கோயம்புத்தூ ரிலும் காட்டுப்புத்தூரிலும் கற்றார். திருச்சி பி.ஜி. கல்லூரியில் எப்.ஏ. பயின்றார். பள்ளிப் பிராயத்தில் சித்திரம் வரைவதில் பெரிதும் பாராட்டப்பட்டார்.

கவிஞர் சிறந்த சித்திரக்காரர் என்பதைப் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். மாணாக்கராக இருந்தபோது கவிஞரின் சித்திரத் திறமையை ஆதரித்துப் போற்றியவர்கள் கல்லூரித் தலைவர் எலியட் துரை மகனாரும், சிம்ஸன் துரை மகனாரும் ஆவார்கள்.

சிம்ஸன் துரைக்கு அன்னாரின் குழந்தை ஓவியத்தைப் பெரிதாக்கி உயிர் உள்ள ஓவியமாக குழந்தையின் முழு அழகொழுக தீட்டிக் கொடுத்து அன்னாரின் மகிழ்ச்சியையும் பாராட்டுதலையும் கவிஞர் பெற்றார்.

கவிஞரின் கவிதை உள்ளம் பண்படுவதற்கு உதவியாக இருந்தது. நாடகமேடை. அந்தக் காலத்திய தலை சிறந்த நாடக நடிகர் கிட்டப்பாவுடன் கவிஞருக்கு நெருங்கிய தொடர்பும் தோழமையும் உண்டு. நாடகக்காரர்களுக்குப் புதுப் புதுப்பாட்டுக்களை இயற்றிக் கொடுக்க வேண் டிய பல சந்தர்ப்பங்கள் நேர்ந்தன. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கவிதை புனையும் ஆற்றலை வளர்த்தார்.

கவிஞரின் கவிதை ஆற்றல் உலகுக்குத் தெரிய வந்தது உப்புச் சத்தியாக்கிரகத்திற்குப் பின்னரே ஆகும். ‘தண்டி வழிநடைப் பாடலாக அமைத்த “கத்தியின்றி இரத்த மின்றி யுத்த மொன்று வருகுது” என்ற பாடல் தேசியப்பாடலாக உணர்ச்சியின் உருவாக எழுச்சிக் கவிதையாக இருந்ததால் அவரின் கவிதா சக்தி வெளி உலகிற்குத் தெரியலாயிற்று.

1924-ல் சென்னையில் கூடிய காங்கிரஸ் மகா சபையில் தேசியப் பாட்டுக்களுக்காக ஏற்படுத் திய வித்வான்கள் போட்டியில் கவிஞர் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அது முதல் ‘கவிஞர் காங்கிரஸ் புலவன்’ என்ற பட்டத்துக்கு உரிய வரானார்.

கவிஞருக்குத் தமிழறிவு ஊட்டி, அன்னாரின் தமிழ்ப் புலமைக்குத் தக்க துணையாய் நின்றவர் நாமக்கல் போர்டு உயர் நிலைப்பள்ளித் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் திரு. எம். ஸி. ஆனையப்ப முதலியார் ஆவார்கள். கவிஞரின் புலமையைப் பாராட்டிப் போற்றியவர்களில் தலைசிறந்தவர் திரு. சக்ரவர்த்தி ராசகோபாலாச்சாரியார் ஆவார்.

1906-லிருந்தே தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1920-ல் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் தாலூகாவில் சிறந்த தலைவர்க ளுள் ஒருவராய் நின்று பணிபுரிந்தார். காந்தியின் பால் பெரிதும் ஈடுபாடுடையவர். காந்தியுகத்தில் வாழ அவரைப் பாட அன்னார் வழி நடக்க அவர் கொள்கையைப் பரப்ப வாய்ப்பும் வசதியும் கிடைத்ததையே பெருமையாக எண்ணுபவர். இதனை “அன்று முதல் இன்றளவும் நான் காந்தி பக்தனாகவே அல்லது காந்தி பித்தனாகவே இருந்து வருகிறேன் என்ற அவர் கூற்றாலேயே உணரலாம்.

கவிஞர் சிறந்த கவிஞர் மட்டுமல்ல தலை சிறந்த நாவலாசிரியர், நாடகாசிரியர், கட்டுரை யாளருமாவர். சிலகாலம் ஆஸ்தான கவிஞராக இருந்து பணியாற்றினார். ‘தமிழனென்ற பெரு மையோடு’ தலை சிறந்த தேசியக் கவிஞராக வாழ் கிறார். பல்லாண்டு நாட்டுக்கும் மொழிக்கும் பணி புரிந்து வாழ்வாராக.

இரா. . முருகன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *