அடியார்க்கு நல்ல பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

கந்தர் அலங்கார விரிவுரை நூல் வரிசையில் இது ஏழாவது. இதில் 33-ஆம் பாடல் முதல் 38-ஆம் பாடல் வரையில் உள்ள ஆறு பாடல்கள் விளக்கம் பெறுகின்றன. முதற் பாடல் முருகனுடைய அடியார்கள் இம்மை மறுமைப் பயனை அடைவார்கள் என்பதைச் சொல்கிறது. இரண்டாவது பாடல் காம நோயின் வன்மையைத் தெரிவிக்கிறது. மூன்றாவது பக்தித் துறையைப் பற்றிக் கூறுகிறது. அடுத்தது செல்வம் நிலையாமையையும் இன்ப துன்பங்களின் இயல்பையும் அறிவிக்கிறது. ஐந்தாவது பாடல் எந்த நிலையிலும் முருகனுடைய வேலை நினைக்கும் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறது. ஆறாவது பாடல் முருகன் அருள் இருந்தால் நாளாலும் கோளாலும் வினையினாலும் கூற்றுவனாலும் வரும் துன்பங்கள் இல்லை என்று தைரியம் அளிக்கிறது.

பொருளடக்கம்

அடியார்க்கு நல்ல பெருமாள்
ஞான கலையும் மையல் வலையும்
பக்தித் துறை
இரண்டு ஆறுகள்
‘வேல் மறவேன்’
நாளும் கோளும்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *