நவகாளி யாத்திரை
சாவி

‘போய் வருகிறேன்’

நவகாளி ஜில்லாவிலே மகாத்மாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற நான் ஊருக்குத் திரும்பும்போது காந்தி மகானிடம் விடை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரைத் தரிசிக்கச் சென்றேன்.

புன்னகை பூத்த முகத்துடனே என்னை ஆசீர்வதித்த தெய்வ புருஷர் தம் கைகளை நீட்டி ஹரிஜன நிதிக்குப் பணம் கேட்டபோது என் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் அவர் பாதகமலங்களை நனைத்தது. பத்து ரூபாயை அவர் காலடியில் காணிக்கையாகச் சமர்ப்பித்து விட்டுத் தமிழில் கையெழுத்து ஒன்று போட்டுக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டேன். அவர் போட்டுக் கொடுத்த தமிழ்க் கையெழுத்துக்குப் பத்து ரூபாய்தானா மதிப்பு அட்சர லட்சம் பெறும் கையெழுத்தல்லவா அது? 

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!