
வையை
மழை
நிறைகடன் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம்
பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம்
வெள்ளம்
நிலமறை வதுபோன் மலிர்புன றலைத்தலைஇ
மலைய வினங்கலங்க மலைய மயிலகவ
5 மலைமாசு கழியக் கதழுமருவி யிழியும்
மலிநீ ரதர்பல கெழுவு தாழ்வரை
மாசில் பனுவற் புலவர் புகழ்புல
நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை
மேவிப் பரந்து விரைந்து வினைநந்தத்
10 தாயிற்றே தண்ணம் புனல்;
வையை
புகைபூ அவியா ராதனை யழல்பல வேந்தி
நகையமர் காதலரை நாளணிக் கூட்டும்
வகைசாலும் வையை வரவு:
ஊர் ஒலித்தல்
தொடிதோள் செறிப்பத் தோள்வளை யியங்கக்
15 கொடிசே ராத்திருக் கோவை காழ்கொளத்
தொகுகதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக
உகிருங் கொடிறு முண்டசெம் பஞ்சியும்
நகிலணி யளறு நனிவண்டன் மண்ட
இலையு மயிரு மீர்ஞ்சாந்து நிழத்த
20 முலையு மார்பு முயங்கணி மயங்க
விருப்பொன்று பட்டவ ருளநிறை யுடைத்தென
வரைச்சிறை யுடைத்ததை வையை வையைத்
திரைச்சிறை யுடைத்தன்று கரைச்சிறை யறைகெனும்.
உரைச்சிறைப் பறையெழ வூரொலித் தன்று
நீராடப் போவோர்
25 அன்று, போரணி யணி்யிற் புகர்முகஞ் சிறந்தென
நீரணி யணியி னிரைநிரை பிடிசெல
ஏரணி யணியி னிளைஞரு மினியரும்
ஈரணி யணியி னிகன்மிக நவின்று
தணிபுன லாடுந் தகைமிகு போர்க்கண்
30 துணிபுன லாகத் துறைவேண்டு மைந்தின்
அணியணி யாகிய தாரர் கருவியர்
அடுபுன லதுசெல வவற்றை யிழிவர்
கைம்மா னெருத்தர் கலிமட மாவினர்
நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர்
35 வெண்கிடை மிதவையர் நன்கிடைத் தேரினர்
சாரிகை மறுத்துத் தண்டா வுண்டிகை
ஓரிய வுறுத்தர வூரூர் பிடந்திரீஇச்
சேரி யிளையர் செலவரு நிலையர்
வலிய ரல்லோர் துறைதுறை யயர
40 மெலிய ரல்லோர் விருந்துபுன லயரச்
சாறுஞ் சேறு நெய்யு மலரும்
நாறுபு நிகழும் யாறுவர லாறு
அந்தணர் மருளுதல்
நாறுபு நிகழும் யாறுகண் டழிந்து
வேறுபடு புனலென விரைமண்ணுக் கலிழைப்
45 புலம்புரி யந்தணர் கலங்கினர் மருண்டு
பிறர் மருளுதல்
மாறுமென் மலருந் தாருங் கோதையும்
வேருந் தூருங் காயுங் கிழங்கும்
பூரிய மாக்க ளுண்பது மண்டி
நாரரி நறவ முகுப்ப நலனழிந்து
50 வேறா கின்றிவ் விரிபுனல் வரவெனச்
சேறாடு புனலது செலவு;
வையைப் புனல்
வரையழி வாலருவி(?) வாதா லாட்டக்
கரையழி வாலருவிக் கால்பா ராட்ட
இரவிற் புணர்ந்தோ ரிடைமுலை யல்கல்
55 புரைவது பூந்தாரான் குன்றெனக் கூடார்க்
குரையோ டிழிந்துரா யூரிடை யோடிச்
சலப்படை யானிரவிற் றாக்கிய தெல்லாம்
புலப்படப் புன்னம் புலரியி னிலப்படத்
தான் மலர்ந் தன்றே
60 தமிழ் வையைத் தண்ணம் புனல்;
விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்
தளிரறிந் தாய்தா மிவை
பணிபொசி பண்பபண் டெல்லா நனியுருவத்
தென்னோ துவள் கண்டீ
65 எய்துங் களவினி நின்மார்பிற் றார்வாடக்
கொய்ததும் வாயாளோ கொய்தழை கைபற்றிச்
செய்ததும் வாயாளோ செப்பு;
புனைபுணை யேறத் தாழ்த்ததை தளிரிவை
நீரிற் றுவண்ட சேஎய்குன்றங் காமர்ப்
70 பெருக்கன்றோ வையை வரவு;
ஆமா மதுவொக்குங் காதலங் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லைச்
சுருக்கமு மாக்கமுஞ் சூளுறல் வையைப்
பெருக்கன்றோ பெற்றாய் பிழை;
75 அருகு பதியாக அம்பியிற் றாழ்ப்பிக்கும்
குருகிரை தேரக் கிடக்கும் பொழிகாரில்
இன்னிள வேனி லிதுவன்றோ வையைநின். . .
வையை வயமாக வை;
செல்யாற்றுத் தீம்புனலிற் சென்மரம் போல
80 வவ்வுவல் லார்புணை யாகிய மார்பினை
என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை
வையை யுடைந்த மடையடைத்தக் கண்ணும்
பின்னு மலிரும் பிசிர்போல வின்னும்
அனற்றினை துன்பவிய நீயடைந்தக் கண்ணும்
85 பனித்துப் பனிவாரும் கண்ணவர் நெஞ்சம்
கனற்றுபு காத்தி வரவு;
நல்லாள் கரைநிற்ப நான்குளித்த பைந்தடத்து
நில்லா டிரைமூழ்கி நீங்கி யெழுந்தென்மேல்
அல்லா விழுந்தாளை யெய்தியெழுந் தேற்றியான்
90 கொள்ளா வளவை யெழுந்தேற்றாள் கோதையின்
உள்ளழுத்தி யாளெவளோ தோய்ந்த தியாதெனத்
தேறித் தெரிய வுணர்நீ பிறிதுமோர்
யாறுண்டோ இவ்வையை யாறு;
இவ்வையை யாறென்ற மாறென்னை கையால்
95 தலைதொட்டேன் தண்பரங் குன்று;
சினவனின் னுண்கண் சிவப்பஞ்சு வாற்குத்
துனிநீங்கி யாட றொடங்கு துனிநனி
கன்றிடிற் காமம் கெடூஉ மகளிவன்
அல்லா நெஞ்ச முறப்பூட்டக் காய்ந்தே
100 வல்லிரு ணீய லதுபிழை யாகுமென
இல்லவ ராட விரந்து பரந்துழந்து
வல்லவ ரூட லுணர்த்தர நல்லாய்
களிப்பர் குளிப்பர் காமங் கொடிவிட
அளிப்ப துனிப்ப வாங்காங் காடுப
வாழ்த்து
105 ஆடுவார் நெஞ்சத் தலர்ந்தமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு.
முற்றும்.
✩ ✩ ✩



