
சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் – கா. சுப்பிரமணியபிள்ளை

சிவமயம்திருச்சிற்றம்பலம்சைவசித்தாந்த விளக்கச் சுருக்கம் தோற்றுவாய் உலகத்திலுள்ள பொருள்கள்க. அறிவுள்ளனஉ. அறிவில்லாதன என இருவகைப்படும் –அறிவுள்ளன இயக்குவன.அறிவில்லா தன இயங்குவன. இவ்விரண்டையும் சித்து என்றும், சடம் என்றும் முறையே கூறுப. அறிவுள்ளன யாவும் தாமே பொருள்களை அறிவன வல்ல. தாமே யாவற்றையும் அறியும் கடவுள் ஒருவர் அறிவிக்க, அவை அறியும். அக் கடவுளே சிவபெருமான்.க. அறிவுள்ளன உயிர்கள்.உ.…









